Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்ன தெரிகிறது அங்கு”.. ஜிம்பாப்வே போட்டியில் அஸ்வின் செய்த குறும்பு விஷயம்.. இணையத்தில் சிரிப்பலை!

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த ஒரு விஷயம் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து நாளை முதல் அரையிறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இரு அணிகளும் மோதும் போட்டி நவம்பர் 10ம் தேதியன்று அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு சென்றடைந்த இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீர் சிரிப்பலை

திடீர் சிரிப்பலை

இந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த முக்கிய போட்டியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ட்ரெண்டாகி வருகிறார். இதற்கு காரணம் ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் அவர் செய்த ஒரு விஷயம் தான். இந்த போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

அஸ்வினின் குறும்பு

அஸ்வினின் குறும்பு

இந்த போட்டியில் டாஸின் போது ரோகித் சர்மா நெரியாளரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்த அஸ்வின் தனது கைகளில் 2 ஸ்வட்டர்களை வைத்துக்கொண்டு குழம்பி நின்றார். பின்னர் ஒவ்வொன்றாக முகர்ந்துப்பார்த்துக் கொண்டிருந்தது கேமிராவில் பதிவானது. இதனை பார்த்த ரசிகர்கள் "அப்படி எதனை முகர்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என கிண்டலடித்து வருகின்றனர்.

அஸ்வின் விளக்கம்

அஸ்வின் விளக்கம்

இந்த வீடியோ ட்ரெண்டானதை அடுத்து, அஸ்வினே விளக்கம் அளித்துள்ளார். அதில், " இரண்டில் எது என்னுடைய ஜாக்கெட் என அளவிட்டு பார்த்தேன் கண்டுபிடிக்க முடியவில்லை. இனிஷியல்களும் பதியப்படவில்லை. இதனால் நான் பயன்படுத்தும் Perfume வாசம் எதில் வருகிறது என்பதை முகர்ந்துப்பார்த்து கண்டுபிடித்தேன் என சிரித்தப்படி பதிவிட்டுள்ளார். மேலும் அடேய் கேமிரா மேன் என்றும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளார்.

அஸ்வின் விக்கெட்

அஸ்வின் விக்கெட்

இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு அஸ்வினும் முக்கிய காரணமாக இருந்தார். 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். இனி வரும் அரையிறுதிப்போட்டியிலும் அவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

Story first published: Tuesday, November 8, 2022, 13:25 [IST]
Other articles published on Nov 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+