Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஒருவருக்கு வாய்ப்பு.. ஒருவருக்கு கெடு”.. டி20 உலகக்கோப்பை அணியில் மாற்றமா??.. பிசிசிஐ விதித்த கெடு!

மும்பை: டி20 உலகக்கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு பிசிசிஐ முக்கிய சுற்றறிக்கையை விட்டுள்ளது.

Recommended Video

Virat Kohli ஏன் T20I-யில் Opening இறங்கணும்? India-வுக்கு சாதகமா? | Aanee's Appeal

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியை பொறுத்தவரையில் பவுலிங்கில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக மெயின் அணியில் சேர்க்கப்படுவார் என நினைக்கப்பட்ட முகமது ஷமி பேக் அப் வீரராக அழைத்து செல்லப்படவுள்ளார்.

ஹர்ஷல் பட்டேலுக்கு சிக்கல்

ஹர்ஷல் பட்டேலுக்கு சிக்கல்

இந்நிலையில் ஹர்ஷல் பட்டேலுக்கு மட்டும் முக்கிய கெடுவை பிசிசிஐ விதித்துள்ளது. டி20ல் நல்ல அனுபவமுள்ள பும்ரா எப்படியேனும் அணிக்குள் கொண்டு வரப்படுவார். ஆனால் ஹர்ஷல் பட்டேல் மீண்டும் தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே டி20 உலகக்கோப்பை தொடருக்கு அழைத்து செல்லப்படுவார் என கூறியுள்ளார். இல்லையெனில் முகமது ஷமிக்கு தான் வாய்ப்பு.

அடுத்த 6 போட்டிகள் கெடு

அடுத்த 6 போட்டிகள் கெடு

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் மோதவுள்ளது. இந்த 2 டி20 தொடர்களுமே இந்திய மண்ணில் தான் நடைபெறுகிறது. இதில் ஹர்ஷல் பட்டேல் மற்றும் முகமது ஷமி இருவருமே பவுலிங் செய்யவுள்ளனர். எனவே ஹர்ஷல் தனது ஃபார்மை நிரூபித்தே தீர வேண்டும்.

மேலும் 2 சீனியர்கள்

மேலும் 2 சீனியர்கள்

இது ஒருபுறம் இருக்க ஆசிய கோப்பையில் கலக்கிய ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கும் பிசிசிஐ அறிவுரையை கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக விளையாடி வரும் அவர்கள், ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் பெங்களுரூ தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து உடற்தகுதியை மேம்படுத்திக்கொண்டு தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story first published: Thursday, September 15, 2022, 9:02 [IST]
Other articles published on Sep 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+