Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ மை காட்.. இரு விக்கெட் கீப்பருமே சரியில்லை.. ஆஸ்திரேலிய களத்தில் வைத்த ஆப்பு.. ரசிகர்கள் கவலை!

பெர்த்: இந்திய விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருமே ஆஸ்திரேலியாவில் திணறுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதல் 2 பயிற்சி போட்டிகளை இந்திய அணி இன்று முடித்தது.

இன்று நடைபெற்ற 2வது பயிற்சி போட்டியில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்த போட்டிகளில் முன்னணி வீரர்கள் இல்லை எனக்கூறினாலும், விக்கெட்கள் கீப்பர்கள் இருவருமே சொதப்பியது பேசுப்பொருளாகியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இளம் வீரர் ரிஷப் பண்ட்-க்கு ஓப்பனிங் களமிறங்கும் வாய்ப்பே கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டையுமே அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 9 (16), 9 (11) என சொற்ப ரன்களையே அடித்து வெளியேறினார்.

பண்ட்-ன் சோகம்

பண்ட்-ன் சோகம்

நடப்பாண்டில் இதுவரை 15 டி20ல் ஆடியுள்ள பண்ட் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அதுவும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 127 க்கு குறைந்துள்ளது. இதன் மூலம் இந்திய ப்ளேயிங் 11ல் அவர் சேர்க்கப்படுவது ரிஸ்க்-காக பார்க்கப்படுகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் கலக்கும் அவர் டி20-ல் சரிபட்டு வரமாட்டார் என தெரிந்துள்ளது. இவர் தான் இப்படி என்றால், மாற்று வீரராக உள்ள தினேஷ் கார்த்திக்கும் சொதப்புகிறார்.

கார்த்திக்-ம் சொதப்பல்

கார்த்திக்-ம் சொதப்பல்

ஃபினிஷர் பணிக்காக களமிறங்கும் தினேஷ் கார்த்திக் இந்த இரண்டு போட்டிகளிலும் 19 (23), 10 (14) மட்டுமே அடித்து ஏமாற்றியுள்ளார். கடந்த 7 டி20 போட்டிகளில் அவர் ஒரே ஒருமுறை மட்டுமே 30 ரன்களை தாண்டியுள்ளார். அவருக்கு குறைவான பந்துகளே கிடைப்பது உண்மை தான். ஆனால் ஐபிஎல்-ல் ஆர்சிபிக்காக அவர் செய்த மேஜிக் இங்கு நடக்கவில்லை என்பது தான் ரசிகர்களின் கவலை.

டிராவிட்-க்கு சிக்கல்

டிராவிட்-க்கு சிக்கல்

ஃபினிஷாராக களமிறங்கிய போதும் ஆஸ்திரேலியாவில் இப்படி மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன் சேர்ப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல. எனவே இவர்கள் இருவர் மீதும் தனி கவனம் வைத்து டிராவிட் மாற்றம் கொண்டு வரவேண்டும். அடுத்த 2 பயிற்சி போட்டிகளில் இந்த ஃபினிஷிங் பிரச்சினையை சரி செய்தே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது.

Story first published: Thursday, October 13, 2022, 18:52 [IST]
Other articles published on Oct 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+