Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு பெரிய அடி.. டி20 உலகக்கோப்பையில் ரோகித்திற்கு உள்ள சவால்.. ஜெயவர்தனே எச்சரிக்கை!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் பெரும் இழப்பாக உள்ளது என மஹிலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.

கிரிக்கெட் திருவிழாவான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் நடைபெறவுள்ளது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடைபெற்று வருகின்றன.

டி20 உலகக்கோப்பை போட்டி

டி20 உலகக்கோப்பை போட்டி

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், பாண்ட்யா என படு பலமாக உள்ளது. பந்துவீச்சிலும் ஹர்ஷல் பட்டேல், பும்ரா, புவனேஷ்வர் என மீண்டும் அணிக்கு வந்துள்ளதால் இந்தியா உலகக்கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜெயவர்தனே அட்வைஸ்

ஜெயவர்தனே அட்வைஸ்

இந்நிலையில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய பிரச்சினை இருப்பதாக இலங்கை முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்தனே கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஜடேஜா இல்லாதது இந்தியாவுக்கு பெரும் இழப்பாக இருக்கும். நம்.5 வது இடத்தில் ஜடேஜாவை அழகாக பொருத்தியிருந்தனர். ஹர்திக்கும், ஜடேஜாவும் டாப் 6க்குள் இருந்தது இந்தியாவின் பேட்டிங்கில் எப்படிபட்ட மாறுதல்களையும் ஏற்படுத்திக்கொண்டன. ஆனால் அப்படி செய்ய முடியாது.

இடதுகை வீரர்

இடதுகை வீரர்

இதே போல ஜடேஜா இல்லாததால் ஒரு இடதுகை பேட்ஸ்மேனையும் இந்தியா இழக்கிறது. ஆசிய கோப்பையில் இடதுகை வீரர் வேண்டும் என பண்ட்-ஐ உள்ளே கொண்டு வந்துவிட்டு, தினேஷ் கார்த்திக்கை உட்காரவைத்தார்கள். ஆனால் அது சொதப்பியது. எனவே இதனையெல்லாம் சமாளிப்பது இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என ஜெயவர்தனே கூறியுள்ளார்.

இந்திய அணி திட்டம்

இந்திய அணி திட்டம்

இதுஒருபுறம் இருக்க, இந்தியாவின் ப்ளேயிங் 11ல் தினேஷ் கார்த்திக்-ஐ நிச்சயம் சேர்ப்பது தான் என முன்பே முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜடேஜாவின் இடத்தில் அக்‌ஷர் பட்டேலை கொண்டு வந்துவிட்டு, பழைய திட்டத்துடனே இந்தியா களமிறங்க டிராவிட் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Saturday, September 17, 2022, 16:30 [IST]
Other articles published on Sep 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+