Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டி.. ப்ளேயிங் 11 ரோகித் சர்மா தந்த பெரும் ஷாக்.. இந்திய அணி பேட்டிங்!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடருக்கான பயிற்சி போட்டியில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

இப்போட்டியில் தொடக்கத்திலேயே இந்திய ப்ளேயிங் 11 கேப்டன் ரோகித் சர்மா அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்குகின்றனர். முதல் விக்கெட்டிற்கு வழக்கம் போல விராட் கோலியும், 2வது விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவும் விளையாடவுள்ளனர். மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் பவுலிங் படையில் தான் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படவில்லை. ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட ஷமி இந்தாண்டில் இன்னும் ஒரு டி20ல் கூட ஆடவில்லை. இந்த சூழலில் அவருக்கு இந்த போட்டியிலும் விளையாடவைக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பவுலிங் வரிசை

பவுலிங் வரிசை

வேகப்பந்துவீச்சில் ஆசிய கோப்பை கூட்டணியான புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரே வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியாவின் பழைய கூட்டணியை வழுப்படுத்த வேண்டும் என்பதற்காக இவர்களை களமிறக்கியுள்ளனர். 4வது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்ட்யா செயல்படவார். சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் யுவேந்திர சாஹல் அமரவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக அக்‌ஷர் மற்றும் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங்

எனினும் இது பயிற்சி போட்டி என்பதால் 15 வீரர்களில் யாரை வேண்டுமேனாலும் போட்டியின் இடையே விளையாட வைக்கலாம். இதனால் ஷமி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடை இடையே விளையாடலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, October 17, 2022, 9:40 [IST]
Other articles published on Oct 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+