“என்னா மனசுயா உங்களுக்கு” வெற்றிக்கு பின் ரோகித், கோலி எடுத்த முடிவு.. பாகிஸ்தான் ரசிகர்களே பாராட்டு
சிட்னி: பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி செய்த விஷயம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சமீபத்தில் மோதின. இந்த போட்டியில் இந்தியா 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மொத்த இந்திய அணியும் சரிந்துவிட, விராட் கோலி தனியாளாக நின்று போட்டியை முடித்துக்கொடுத்தார்.

இந்திய அணி வெற்றி
கடைசி பந்து வரை சென்று த்ரில் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய வீரர்கள் கோலாகலமாக கொண்டாடினார். அதுவும் தீபாவளி சமயத்தில் போட்டி நடைபெற்றதால், இந்திய ரசிகர்களுக்கு டபுள் விருந்தாக அமைந்தது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் செய்த விஷயத்தால் பாகிஸ்தான் அணி ரசிகர்களும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சிறப்பான ஏற்பாடு
பாகிஸ்தானுடனான வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்கள் தீபாவளியை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடவிருந்தனர். சிட்னியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அங்கு பிரமாண்ட முறையில் வாணவேடிக்கைகள் மறும் இரவு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

ரோகித்தின் முடிவு
ஆனால் கடைசி நேரத்தில் ரோகித் மற்றும் விராட் கோயிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அதில் பாகிஸ்தானுடனான வெற்றியை கோலாகலமாக கொண்டாடாதீர்கள், அது தவறான ஒன்று. போட்டி கடைசி நேரத்தில் தான் நாம் வெற்றி பெற்றுள்ளோம். எதிரணியினரும் சிறப்பாக விளையாடியுள்ளனர் என்பதால் நாம் தவறுகளை சரி செய்ய வேண்டும்.

இலக்கு
இன்னும் நாம் தொடரை முடிக்கவில்லை. நமது பெரிய இலக்கை நோக்கி பயணிக்க தயாராகுங்கள். இப்போதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், கவனம் சிதறிவிடும். எனவே முதல் வந்த பணியை முடித்து கோப்பை வென்ற பின்னர் கொண்டாடலாம் எனக்கூறியுள்ளனர். இதனையடுத்து இந்திய வீரர்களும் அனைத்தையும் ரத்து செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications