Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெத்து காட்டிய நெதர்லாந்து பவுலிங்.. கடைசி நேரத்தில் கோலி -சூர்யகுமார் போராட்டம்.. 180 ரன்கள் இலக்கு

சிட்னி: நெதர்லாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி கடைசி நேர போராட்டத்தால் கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் இன்று சிட்னி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக கூறினார்.

ஓப்பனிங் அதிர்ச்சி

ஓப்பனிங் அதிர்ச்சி

சிட்னி மைதானத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் தொடக்கத்தில் இருந்தே கெத்து காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கத்திலேயே ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் திணறி அதிர்ச்சி கொடுத்தனர். பவுண்டரி அடிக்க முடியாமல் திணறி வந்த கே.எல்.ராகுல் 12 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

குறைந்த ரன்ரேட்

குறைந்த ரன்ரேட்

இதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி சீரான வேகத்தில் ரன்ரேட்டை உயர்த்தினர். ஒருபுறம் விராட் கோலி நிதானமாக விளையாட, ரோகித் சர்மா அதிரடி காட்டினார். 39 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 53 ரன்களை விளாசி ஒரு கட்டத்தில் அவுட்டானார்.

கவலை தந்த நிலை

கவலை தந்த நிலை

களத்தில் பந்தின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால், இந்திய பேட்ஸ்மேன்களாக சிக்ஸருக்கு விரட்டவே முடியவில்லை. இதனால் 12 ஓவர்கள் முடிந்த பிறகும் இந்திய அணி 84 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. எனினும் கடைசி நேரத்தில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் கியரை மாற்றினார். இருவருமே அதிரடியாக ரன் வேட்டை நடத்த தொடங்கினர்.

கியரை மாற்றிய கோலி

கியரை மாற்றிய கோலி

சிறப்பாக ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்களை விளாசினார். டி20 கிரிக்கெட்டில் அவருடைய 37வது அரைசதம் இதுவாகும். மறுபுறம் வழக்கம் போல் அசத்திய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்களை குவித்துள்ளது.

Story first published: Thursday, October 27, 2022, 14:47 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+