Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புள்ளிப்பட்டியலில் திடீர் ட்விஸ்ட்.. இந்தியாவுக்கு செமி ஃபைனல் வாய்ப்பு உள்ளதா? இன்னும் ஒரு படி தான்

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் வலுவடைந்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்தபோட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய பவுலர்கள் அசத்தல்

இந்திய பவுலர்கள் அசத்தல்

ஸ்காட்லாந்து அணி தொடக்கத்தில் சற்று அதிரடி காட்டியது. ஆனால் நீண்ட நேரம் அந்த அணியின் பாட்ஷா பழிக்கவில்லை. இந்திய அணியின் பவுலர்கள் வீசிய ஓவர்களில் சீட்டுக்கட்டாக ஸ்காட்லாந்து சரிந்து 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 15 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

அபார வெற்றி

அபார வெற்றி

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி என்ற கணக்கிற்கு துவம்சம் செய்தனர். ரோகித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்களுக்கு வெளியேறினார். இதே போல் மறுமுணையில் விளையாடிய கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனையை புரிந்தார். இதனால் 6.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது.

ரன் ரேட் உயர்வு

ரன் ரேட் உயர்வு

இந்த போட்டியில் மிக விரைவாக இந்திய அணி இலக்கை எட்டியதால் 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் +1.619 நெட் ரன் ரேட்டில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி +1.481 நெட் ரன்ரேட்டுன் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

 செமி ஃபைனல்ஸ் வாய்ப்பு

செமி ஃபைனல்ஸ் வாய்ப்பு

இதற்கான விடையாக ஆம் என கூறலாம். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் 4வது இடத்தில் உள்ள ஆஃப்கானிஸ்தான் அணியும் வரும் அக்.7ம் தேதியன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று, இந்திய அணி நமீபியாவை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினால் அரையிறுதிக்குள் சுலபமாக நுழைந்துவிடலாம். இதனால் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் போட்டியை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

Story first published: Friday, November 5, 2021, 23:26 [IST]
Other articles published on Nov 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+