Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20WorldCup: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. கம்பேக் கொடுக்கும் முக்கிய வீரர்கள்.. அதிரடி கன்ஃபார்ம்!

சென்னை: டி20 உலகக்கோப்பை தொடருக்காக அதிரடி வீரர்கள் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

Recommended Video

இந்தியாவிற்கு மாற்றப்படுகிறதா T20 World Cup? India ரசிகர்களை குழப்பிய ICC

இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அதனுடைய போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஓமன் நாட்டில் தகுதிச்சுற்று போட்டிகள் மட்டுமே நடைபெறுகிறது. சூப்பர் 12 லீக் ஆட்டங்கள் அனைத்தும் அமீரகத்தில் உள்ள சார்ஜா, அபுதாபி, துபாய் மைதானங்களில் நடைபெறவுள்ளது.

 நிலவும் கடும் போட்டி

நிலவும் கடும் போட்டி

ஒரு சில அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளதால் இந்த முறை யார் கோப்பையை வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி

இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்ளிட்ட வீரர்கள் நீண்ட நாட்கள் ஓய்வுக்கு பின்னர் களம் காணுகின்றனர். இவர்கள் கடைசியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர். விக்கெட் கீப்பிங்கிற்கு வழக்கம் போல் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் ஒரு சுவாரஸ்ய விஷயமாக புதுமுக வீரர் ஜோஸ் இங்லிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியின் நம்பிக்கை

அணியின் நம்பிக்கை

இதுகுறித்துப் பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் அதிகாரி ஜார்ஜ் பெய்லி, " டி20 உலகக்கோப்பைக்காக மிகவும் வலுவான அணியை தேர்வு செய்துள்ளோம். இந்த அணியால் நிச்சயம் கோப்பையை வெல்ல முடியும். ஜோஸ் இங்லிஸ் கடந்த சில உள்ளூர் போட்டிகளில் நன்கு ரன்களை குவித்திருக்கிறார். இங்லிஸால் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனத்தெரிவித்துள்ளார்.

15 பேர் கொண்ட அணி

15 பேர் கொண்ட அணி

ஆரோன் பின்ச், ஆஸ்டன் ஆகர், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்ஸன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

Story first published: Thursday, August 19, 2021, 20:54 [IST]
Other articles published on Aug 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+