Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை சொதப்பல்.. கோலி மீது பாயும் நடவடிக்கை.. கடும் ஆத்திரத்தில் பிசிசிஐ.. பரபரப்பு பின்னணி!

அமீரகம்: இந்திய அணியின் சொதப்பல்களால் கேப்டன் விராட் கோலி மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடனான தோல்வி இதற்கு காரணமாகிவிட்டது.

இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டமாக இன்று நமிபியா அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

 கடைசி லீக் போட்டி

கடைசி லீக் போட்டி

இந்த உலகக்கோப்பை தொடர் விராட் கோலிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்த தொடருடன் விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். அவர் பதவி விலகும் போதாவது ஐசிசி கோப்பையை வென்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கொஞ்சம் கூட நடக்கவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

இந்திய அணியின் டாப் ஆர்டர் மிக மோசமாக விளையாடியது. ஒருபுறம் ஐபிஎல் தொடரில் விளையாடிய மிதப்பில் இதிலும் விளையாடியதே தோல்விக்கு காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. மற்றொரு புறம் கோலியின் கேப்டன்சி தான் மோசமாக அமைந்துவிட்டது. அணி வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அவர் கொடுக்கவில்லை என்ற புகார் குவிந்துள்ளது.

பிசிசிஐ கடும் அதிருப்தி

பிசிசிஐ கடும் அதிருப்தி

இந்நிலையில் விராட் கோலியின் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக டி20 போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 அதிகாரியின் தகவல்

அதிகாரியின் தகவல்

இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், விராட் கோலியின் கேப்டன்சி மீது பிசிசிஐ மகிழ்ச்சியாக இல்லை. அவரின் கேப்டன்சி மீது அதிருப்தியில் உள்ளனர். அவரின் கேப்டன்சியில் இந்திய அணி இந்த டி20 தொடரின் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேற இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. எனவே நிச்சயம் விராட் கோலியிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான கேப்டன் பதவியும் பறிக்கப்படும் என்று தோன்றுகிறது என அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 8, 2021, 21:32 [IST]
Other articles published on Nov 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+