Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அந்த ஒரு விஷயம் போதும்” டி20 உலகக்கோப்பை எங்களுக்கு தான்.. அணிகளை பயமுறுத்திய மோர்கன்!

லண்டன்: டி20 உலகக்கோப்பை வெல்வதற்கு இங்கிலாந்து அணியிடம் முக்கியமான தகுதி ஒன்று உள்ளதாக அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் அடித்துக் கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி சமீபத்தில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான முழு போட்டி அட்டவணையையும் ஐசிசி வெளியிட்டிருந்தது.

4 முக்கிய அணிகள்

4 முக்கிய அணிகள்

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் இந்தியா மட்டும் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள 3 அணிகளும் ஒரே க்ரூப்பில் இடம் பெற்றுள்ளதால் பரபரப்பான ஆட்டம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

க்ரூப் ஏ அணிகள்

க்ரூப் ஏ அணிகள்

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியாக மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரு அணிகளுக்கு ஏற்கனவே பழைய கணக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதாவது கடைசியாக நடைபெற்ற 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தான் இங்கிலாந்து வீழ்ந்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு அருகில் சென்றுவிட்ட சூழலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வெயிட் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி அசத்தினார்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இந்நிலையில் இந்த முறை இங்கிலந்து அணிதான் கோப்பையை வெல்லும் என அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் அடித்துக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எங்களுடைய மிகப்பெரும் பலமே, எங்களிடன் உள்ள நிலையான ஆட்டம் தான். கடந்த 2 வருடங்களாகவே ஒரே மாதிரி சிறப்பாக விளையாடுகிறோம். டி20 உலகக்கோப்பை தொடரில் எங்கள் க்ரூப்பில் நிறைய திறமைவாய்ந்த அணிகள் நிறைந்துள்ளது. எனவே அது எங்களுக்கு சற்று சவாலை கொடுக்கிறது.

காத்திருக்கும் இங்கிலாந்து

காத்திருக்கும் இங்கிலாந்து

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இங்கிலாந்து அணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மிகப்பெரியது. கோப்பைக்கான எங்களின் எதிர்பார்ப்பு நீண்ட வருடமாக நீடித்து வருகிறது. 2016ம் ஆண்டு விட்ட ஆட்டத்தை இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் பிடிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி இதற்கு முன்னர் கடந்த 2010ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 20, 2021, 15:55 [IST]
Other articles published on Aug 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+