Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் தோற்றாலும் பாக். கில்லி தான்.. ஆஸ்திரேலியாவை சுளுக்கெடுத்த ஃபகார் சமான்.. கடின இலக்கு நிர்ணயம்!

அமீரகம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடும் போராட்டத்திற்கு பின்னர் சவாலான இலக்கை பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று 2வது அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 வழக்கமான தொடக்கம்

வழக்கமான தொடக்கம்

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் வழக்கம் போல் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். 34 பந்துகளை சந்தித்த பாபர் அசாம் 39 ரன்களை விளாசினார். இதனால் முதல் விக்கெட்டிற்கு அந்த அணி 71 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாமின் விக்கெட்டிற்கு பிறகு பாகிஸ்தானின் ரன் ரேட் குறைய தொடங்கியது.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய ஃபகார் சமான் - முகமது ரிஸ்வானுடன் சேர்ந்து நிதானமாக ரன்களை சேர்த்தார். இதனால் 15 ஓவர்களில் அந்த அணி 117 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஓரளவிற்கு அதிரடி காட்டப்படும் என்ற சூழல் உருவானபோது 67 ரன்களுக்கு ரிஸ்வான் அவுட்டானார். இதனால் 150 ரன்களையாவது பாகிஸ்தான் அணி எட்டுமா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுத்தார் ஃபகார் சமான்.

கடைசி நேர அதிரடி

கடைசி நேர அதிரடி

17வது ஓவரில் இருந்து தனது கியரை மாற்றிய ஃபகார் சமான், பவுண்டரி, சிக்ஸர் என நாளாபுறமும் ரன் வேட்டை நடத்தினார். 32 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸருடன் 55 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. கடைசி 24 பந்துகளில் மட்டும் அந்த அணி 56 ரன்கள் சேர்த்தது.

எகிறிய எதிர்பார்ப்ப்

எகிறிய எதிர்பார்ப்ப்

போட்டி நடைபெறும் இந்த களத்தில் 176 என்பது கடின இலக்காக பார்க்கப்படுகிறது. எனினும் இங்கு பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சு எடுபடுவது சிரமம் தான். இதனால் ஆஸ்திரேலியா எட்டிப்பிடிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Friday, November 12, 2021, 9:41 [IST]
Other articles published on Nov 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+