Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கொடுத்த வாக்கை காப்பாற்ற தெரியாதா?”.. விராட் கோலி செய்த தவறு.. விட்டு விளாசும் ரசிகர்கள்!

அமீரகம்: ஐபிஎல் தொடர் முடிந்தவுடனேயே இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தான் கொடுத்த வாக்கில் இருந்து தவறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்றுப்போட்டிகள் நடந்து வருகின்றன.

இவை முடிந்தவுடன் சூப்பர் 12 போட்டிகள் வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு முதல் போட்டி வரும் அக்டோபர் 24ம்தேதி நடைபெறவுள்ளது.

பயிற்சி அணி

பயிற்சி அணி

இதற்காக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் இந்திய அணி பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 189 என்ற இலக்கை இந்திய அணி அசால்டாக விரட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஓப்பனிங் வீரர்கள் கே.எல்.ராகுல் 51 (24) மற்றும் இஷான் கிஷான் 70 (46) ஆகியோர் அமைந்தனர். ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்ததால், வாய்ப்பு பெற்ற கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷான் இருவருமே சிறப்பாக விளையாடி நிரூபித்து விட்டனர்.

ஓப்பனிங்கில் யார்

ஓப்பனிங்கில் யார்

இதனால் இந்திய அணியின் ஓப்பனிங் இடத்திற்கு யார் களமிறங்குவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேப்டன் விராட் கோலி அதுகுறித்து பேசியுள்ளார். அதில் அவர் இந்திய அணியில் ரோகித் சர்மா ஓப்பனிங் ஆடுவார். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். ரோகித் சர்மாவுடன் நிச்சயம் தொடக்க வீரராக நிச்சயம் கே.எல். ராகுல் மட்டும் தான் விளையாடுவார். அவரை ஓப்பனிங்கில் இருந்து கீழே இறக்குவது மிகவும் கடினமான ஒன்று.

Recommended Video

Ravi Shastri Says Dew Factor Will Decide Whether India Will Play An Extra Spinner Or Seamer
கோலியின் இடம்

கோலியின் இடம்

ஐபிஎல் தொடரின்போது இருந்த சூழல் வேறு. தற்போது சர்வதேச போட்டிகளில் இருக்கும் சூழல் வேறு. எனவே அதற்கேற்றார் போல் மட்டுமே முடிவெடுக்க முடியும். முதல் விக்கெட்டிற்கு நான் களமிறங்குவேன். அடுத்தடுத்த வரிசைகளில் யார் பங்குபெறுவார் என்பது பயிற்சியின் முடிவில் தெரியவரும். அதனை இப்போதே கூற முடியாது என அவர் தெரிவித்தார்.

கோலி மீது அதிருப்தி

கோலி மீது அதிருப்தி

இந்நிலையில் விராட் கோலி வாக்கை மீறியதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் இஷான் கிஷான் ஃபார்ம் அவுட்டில் இருந்த போது அவரிடம் விராட் கோலி பேசியிருந்தார். அதில் இந்திய அணியில் ஓப்பனிங் இடம் கொடுப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் இஷான் கிஷனின் ஃபார்ம் அசுரத்தனமாக சென்றது பயிற்சி போட்டியின் போது கூட அரைசதம் விளாசி அசத்தினார். இருப்பினும் அவருக்கு ஓப்பனிங் சான்ஸ் கிடைக்கவில்லை. ப்ளேயிங் 11ல் இடம் கிடைக்குமா என்பதிலேயே சந்தேகம் நிலவி வருகிறது.

Story first published: Tuesday, October 19, 2021, 19:38 [IST]
Other articles published on Oct 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+