அசால்டாக ரன் வேட்டை நடத்துவார்.. பாண்டிங்கையே வியக்கவைத்த இளைஞர்.. டி20 உலகக்கோப்பையில் அறிமுகம்
சென்னை: டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் வீரர் நிச்சயம் அடித்து நொறுக்குவார் என முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
Recommended Video
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் அனைத்து போட்டிகளின் முழ் அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. இதனையடுத்து அணிகள் தங்களது வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய அணி
இன்று காலை டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அந்த பட்டியலில் நட்சத்திர வீரர்களான மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்ளிட்ட வீரர்கள் நீண்ட நாட்கள் ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். விக்கெட் கீப்பிங்கிற்கு வழக்கம் போல் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரராக இதுவரை சர்வதேச போட்டிகளில் களமிறங்காத புதுமுக வீரர் ஜோஸ் இங்லிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜார்ஜ் பெய்லி விளக்கம்
இதுகுறித்து பேசியுள்ள அணியின் இயக்குநர் ஜார்ஜ் பெய்லி, மேத்யூ வேட்டிற்கு உறுதுணையாக விக்கெட் கீப்பிங்கில் புதுமுக வீரர் ஜோஸ் இங்லிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில உள்ளூர் தொடர்களில் இவர் தொடர்ச்சியாக ரன்களை குவித்திருக்கிறார். இதனால் இவர் இந்த தொடரில் நிச்சயம் ஜொலிப்பார் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. நிச்சயம் இந்த அணி உலகக்கோப்பையை வெல்லும் எனத் தெரிவித்திருந்தார்.

பாண்டிங் பாராட்டு
இந்நிலையில் ஜோஸ் இங்லிஸ் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இங்லிஸுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் விளையாட்டு தனமாகவே ரன்களை அதிரடியாக குவிக்கக்கூடியவர். அவர் மட்டும் விளையாடிவிட்டால், அவரின் வாழ்கை மிகப்பெரும் எடுத்துக்காட்டாக இருக்கும் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லக்கூடிய பலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளார்.

கோப்பை வெல்ல ஏக்கம்
ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 முறை ஒருநாள் கிரிக்கெட்டுக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதே போல கடந்த 2009ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆனால் அந்த அணியின் டி20 உலகக்கோப்பை கனவு இன்று வரை நிறைவேறாமலே உள்ளது. எனவே இந்த முறை கோப்பையை வெல்ல கடும் போராட்டத்தில் இறங்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications