அவங்க 2 பேரும் தேறமாட்டாங்க.. டி20 உலகக்கோப்பைக்கான திட்டம்.. ரோகித்திற்கு சீனியர் கூறிய முக்கிய அட்வைஸ்
மும்பை: உலகக்கோப்பையை வென்றுவிடுவோம் என்று கூறுவதற்கு முன்னர் இந்திய அணியில் இருக்கும் 2 முக்கிய பிரச்சினையை ரோகித் சரி செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி தற்போதே பணிகள் தொடங்கி விட்டது.
நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என தொடர்ந்து 3 தொடர்களை வைட் வாஷ் செய்து ரோகித் சர்மாவின் படை அசத்தியுள்ளது.

இந்தியாவின் வெற்றி பாதை
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்ற பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், இஷான் கிஷான், சூர்யகுமார் என இளம் வீரர்கள் தங்களது இடங்களை உறுதி செய்துக்கொண்டனர். ஆனால் பந்துவீச்சில் தான் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வருகிறது.

2 பிரச்சினைகள்
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலக்கிய புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சஹார் ஆகியோரை அணியில் சேர்ப்பது கடினம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். அதில், இந்திய அணியில் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசக்கூடிய பவுலர்கள் உள்ளனர். ஆனால் சிராஜ், ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல் ஆகியோரின் பந்துவீச்சை பார்த்தால், புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சஹாருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். இதனை ரோகித் தற்போதே சரி செய்ய வேண்டும்.

என்ன காரணம்
டி20 உலகக்கோப்பை நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா போன்ற களங்களில் 140 கிமீ வேகத்தில் வீசும் பவுலர்களால் தான் தாக்கம் ஏற்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால் புவனேஷ்வர் மற்றும் தீபக் சஹார் ஆகியோரின் வேகம் சற்று குறைவாக இருப்பது தான் பிராட் ஹாக் கூறியதற்கு பின்னால் உள்ள முக்கிய காரணமாக இருக்கிறது.

ரோகித் திட்டம்
ரோகித் சர்மா பதவியேற்றுக்கொண்டதில் இருந்து இளம் வீரர்களை முழுமையாக பயன்படுத்தி வருகிறார். அவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை கொடுத்து டி20 உலகக்கோப்பைக்கு தயார் படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். இதன் காரணமாக தான் ஸ்ரேயாஸ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தற்போது ஜொலிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications