Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அப்ப இனிச்சது.. இப்ப கசக்குதா?”.. தோல்வியால் ரவிசாஸ்திரி செய்த விஷயம்.. விட்டு விளாசிய அசாருதீன்!

அமீரகம்: நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு பிறகு ரவிசாஸ்திரி, எதனையும் கண்டுக் கொள்ளாததுபோல் இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த முறை இந்திய அணிதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் படு மோசமாக சொதப்பி வருகிறது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

பாகிஸ்தானுடனான தோல்விக்கு பின்னர் இந்திய அணிக்கு ஒருவாரம் கால அவகாசம் இருந்தது. இதில் இந்திய அணியின் ப்ளேயிங் 11-ல் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தபோதும், டாப் ஆர்டர் சொதப்பலால் மீண்டும் தோல்வியே மிஞ்சியது. நியூசிலாந்துடனான தோல்விக்கு பின்னர் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது.

 சர்ச்சை

சர்ச்சை

இந்திய அணியின் சொதப்பல்களால் வந்த விமர்சனங்களை விட ரவி சாஸ்திரி செய்த விஷயமே தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் அணியின் கேப்டன் பத்திரிகையாளர்களை சந்தித்து தோல்வி குறித்து விளக்கமளிப்பார். ஆனால் நியூசிலாந்துடனான தோல்விக்கு பின்னர் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக்கேப்டன் ரோகித் சர்மா என இருவருமே செய்தியாளர்களை சந்திக்க வரவில்லை.

Recommended Video

Captain இப்படி பேசக்கூடாது.. Virat Kohli மீது Kapil Dev சாடல்
 திடீர் குழப்பம்

திடீர் குழப்பம்

கோலி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்க வந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரர் முகமது அசாருதீன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், விராட் கோலி பத்திரிகையாளர்களை சந்திக்க விரும்பவில்லை என்றால், பயிற்சியாளர் என்ற முறையில் ரவிசாஸ்திரி தான் விளக்கமளிக்க வந்திருக்க வேண்டும்.

பயிற்சியாளர்களின் கடமை

பயிற்சியாளர்களின் கடமை

வெற்றிகளின் போது மட்டும் பயிற்சியாளர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. தோல்விகளின் போதும் விளக்கம் கொடுக்க வேண்டியது கடமை. அதனைவிடுத்து பும்ரா களத்திற்கு வந்தது தவறான ஒன்று. ஒரு அணி 2 தோல்விகளை சந்தித்தால் அதில் அசிங்கப்படுவதற்கு ஏதும் இல்லை. எனவே கேப்டன் அல்லது பயிற்சியாளர்கள் விளக்கம் தரவேண்டும். பவுலரை அனுப்பி வைக்க முடியாது என முகமது அசாருதீன் சாடியுள்ளார்.

Story first published: Tuesday, November 2, 2021, 20:13 [IST]
Other articles published on Nov 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+