Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க இப்படிப்பட்ட ரசிகர்களா? இந்திய அணியை விமர்சித்த ரசிகர்கள் கம்பீர் கொடுத்த ‘நறுக்'கென்ற பதிலடி!

அமீரகம்: ரசிகர்களால் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணிக்காக கவுதம் கம்பீர் குரல் கொடுத்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து நேற்றைய தினம் இந்திய அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

அரையிறுதிக்கு செல்ல நல்ல வாய்ப்பு இருந்த போதும், அதற்கு நியூசிலாந்து அணி முட்டுக்கட்டை போட்டது.

இந்தியா வெளியேறியது.

இந்தியா வெளியேறியது.

இந்திய அணி தற்போது தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும், முதல் 2 முக்கிய போட்டிகளில் சொதப்பியது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்று இருந்தால் கூட அரையிறுதிக்கு சென்றிருக்கலாம். ஆனால் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே மோசமாக இருந்ததால் தொடரில் இருந்தே வெளியேறியுள்ளது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இதற்காக இந்திய அணியையும், நட்சத்திர வீரர்களையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு, அதே நம்பிக்கையுடன் சர்வதேச போட்டிகளை எதிர்கொண்டால் இதுதான் நிலைமை, கோலி கேப்டனாக இருப்பதற்கு தகுதியே இல்லை என மிக மோசமான வார்த்தைகளில் திட்டி தீர்த்துள்ளனர்.

கம்பீர் பதில்

கம்பீர் பதில்

இந்நிலையில் ரசிகர்களுக்கு கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்திய வீரர்களை விமர்சிப்பதற்கு முன்னர், அவர்கள் அனைத்து முக்கிய போட்டிகளையும் பயோ பபுளுக்குள் இருந்து விளையாடினார்கள் என்பதை ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். விமானம் ஏறுவது, ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்படுவது, பயோ பபுள் சூழலில் வாழ்வது என்பதை தொடர்ச்சியாக செய்துள்ளனர்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்

ரசிகர்களுக்கு அட்வைஸ்

இவ்வளவு கஷ்டத்தையும் மீறி தான் அவர்கள் உங்களை மகிழ்விக்க கிரிக்கெட் ஆடி வருகின்றனர். கிரிக்கெட் அவர்களுக்கு ஒரு தொழில், அதில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கின்றனர். நாம் அவர்களுக்காக " சிறப்பாக முயற்சி செய்தீர்கள், அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் எனக்கூறி பாருங்கள்" அது அவ்வளவு அழகாக இருக்கும். இதை வைத்து இந்திய அணியை முடிவு செய்யாதீர்கள். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்>

உலகக்கோப்பை வடிவத்தில் மாற்றம்

உலகக்கோப்பை வடிவத்தில் மாற்றம்

இதே போல டி20 உலகக்கோப்பை தொடரின் விதிமுறைகளும் மாற்றப்பட வேண்டும் என ஐசிசி பாடம் கற்றுக்கொண்டதா என தெரியவில்லை. இவ்வளவு பெரிய தொடரில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் விளையாடுவது போன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இரு பிரிவுகளாக பிரித்து விளையாடினால் அங்கு நியாயம் இல்லாமல் போகிறது எனக்கூறியுள்ளார்.

Story first published: Monday, November 8, 2021, 14:24 [IST]
Other articles published on Nov 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+