Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ரோகித்திற்கு யெஸ்.. கோலிக்கு நோ நோ”.. பொதுவெளியில் கைவிட்ட ஹர்பஜன் சிங்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்!

அமீரகம்: விராட் கோலியை ஒரு பொருட்டாக கூட ஹர்பஜன் சிங் மதிக்காததால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடன் தோல்வியடைந்ததே இதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தகுதிப்பெற்றுள்ளது. இது ஒரு புறம் இருக்க டி20 தொடருக்கான விருப்பமான ப்ளேயிங் 11-களை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள ப்ளேயிங் 11 வித்தியாசமாக அமைந்துள்ளது.

கனவு ப்ளேயிங் 11

கனவு ப்ளேயிங் 11

அவரின் அணியில் ஓப்பனிங்கிற்கு ரோகித் சர்மா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் உள்ளனர். முதல் விக்கெட்டிற்கு இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர், 4வது வீரராக ஷேன் வாட்சன், 5வது வீரராக அதிரடி நாயகன் ஏ.பி.டிவில்லியர்ஸ், 6வது இடத்திற்கு எம்.எஸ்.தோனி சேர்க்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து டுவைன் பிராவோ, கெயிரன் பொல்லார்ட், சுனில் நரேனுக்கு இடம் கொடுத்துள்ளார். இறுதியாக லசித் மலிங்கா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை சேர்த்துள்ளார்.

 யார் கேப்டன்

யார் கேப்டன்

இந்த அணியின் கேப்டன் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், எம்.எஸ்.தோனி எனது அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பர் பணியும் செய்வார். ஜாஸ் பட்லர் அணியில் இடம்பெற்றுள்ளார். எனினும் தோனி விக்கெட் கீப்பிங் செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கோலி இல்லை

கோலி இல்லை

இந்நிலையில் ஹர்பஜனின் இந்த அணியில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை. 3 வடிவ கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக இருக்கும் கோலிக்கு இடமில்லாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முதல் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 7, 2021, 20:31 [IST]
Other articles published on Nov 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+