Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேரத்தில் பின்வாங்கிய முக்கிய வீரர்.. பாக். எதிரான இந்தியா 11ல் திடீர் குழப்பம்.. காரணம் என்ன?

அமீரகம்: இந்திய அணியின் கடைசி கட்ட பயிற்சி போட்டியில் முக்கிய வீரர் ஒருவர் பங்கேற்காதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இரு அணிகளும் மோதும் போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற விவாதம் தான் தற்போது சூடுபிடித்துள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என அனைவரும் உறுதியாகிவிட்டனர். ஆனால் பந்துவீச்சில் தான் இன்னும் தெளிவான முடிவு எட்டப்படாமல் உள்ளது.

பந்துவீச்சு திட்டம்

பந்துவீச்சு திட்டம்

ஜஸ்பிரித் பும்ரா, வருண், ஜடேஜா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் ஆகிய 5 பந்துவீச்சாளர்கள் உறுதியாகிவிட்டனர். ஆனால் 6வது பந்துவீச்சாளராக யார் இருப்பார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. ஹர்திக் பாண்ட்யாவை கொண்டு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும் அவர் பந்துவீசுவாரா என்பது சந்தேகம் தான்.

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சி

இந்நிலையில் நேற்று அணியின் கடைசிகட்ட பயிற்சி போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா கலந்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தை முன்னிட்டு நேற்று வலைபயிற்சி மேற்கொண்டனர். பந்துவீச்சாளர்கள் அனைவருமே தங்களது இடத்தை உறுதி செய்ய கடுமையாக பந்து வீசினர். ஆனால் ஹர்திக் பாண்ட்யா அங்கு இல்லவே இல்லை.

திடீரென வந்த குழப்பம்

திடீரென வந்த குழப்பம்

பேட்டிங்கிலாவது இருப்பார் என்று பார்த்தால், நேற்றைய நாள் முழுவதுமே ஹர்திக் பாண்ட்யா கலந்துக்கொள்ளவில்லை. நேற்றைய பயிற்சி கட்டாயமானது இல்லையென்றாலும், அனைத்து வீரர்களும் தாமாக முன்வந்து கலந்துக்கொண்டனர். ஆனால் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே ஹர்திக் பாண்ட்யா பங்கேற்காதது, அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம்பெறுவாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

Story first published: Sunday, October 24, 2021, 21:57 [IST]
Other articles published on Oct 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+