Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 WorldCup: மொத்தம் ரூ.420 கோடி.. முதல் பரிசு முதல் போனஸ் பரிசு வரை.. ஐசிசி அசரவைக்கும் அறிவிப்பு!

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்காக வாயைப் பிழக்கவைக்கும் அளவிற்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த தொடரின் போட்டிகளை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 3 மைதானங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

மொத்தம் 16 அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில் ஏற்கனவே 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிட்டன. மீதமுள்ள 4 இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தான் வரும் 17ம் தேதி முதல் ஓமனில் நடைபெறுகிறது. மீதமுள்ள சூப்பர் 12 ஆட்டங்கள் அனைத்து அமீரகத்தில் நடைபெறவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் ஐசிசி-க்கு வருமானம் குறைந்து இருப்பதால், டி20 உலகக்கோப்பைகான பரிசுத்தொகைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

மொத்த பரிசுத்தொகை விவரம்

மொத்த பரிசுத்தொகை விவரம்

இந்நிலையில் அனைவரையும் வியக்கவைக்கும் அளவிற்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டி20 உலகக்கோப்பை தொடருக்காக மொத்தம் ரூ. 420 கோடியே 7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடரில் பங்குபெறும் 16 அணிகளுக்குமே பிரித்துக்கொடுக்கப்படவுள்ளது. ஆனால் வெற்றி, தோல்விகளை பொறுத்து பணத்தொகை குறையும்.

முதல் பரிசு எவ்வளவு

முதல் பரிசு எவ்வளவு

அதன்படி டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 12 கோடியே, 2 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதே போல இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்து 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 6 கோடியே 1 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதி வரை சென்று 2 அணிகள் வெளியேற்றப்படும். அப்படி வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ. 3 கோடியே 52 ஆயிரம் கொடுக்கப்படவுள்ளது.

போனஸ் பரிசுத்தொகை

போனஸ் பரிசுத்தொகை

இதுமட்டுமல்லாமல் சூப்பர் 12 பிரிவு போட்டிகளில் போனஸ் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. அதாவது சூப்பர் 12 பிரிவில் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த 30 போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ. 30 லட்சம் கொடுக்கப்படவுள்ளது. சூப்பர் 12 பிரிவில் இருந்து அரையிறுதி அணிகள் செல்லும் அணிகளை தவிர்த்து மீதமுள்ள அணிகள் வெளியேற்றப்படும். அந்த அணிகளுக்கு தலா ரூ.52 லட்சம் வீதம் ரூ.4 கோடியே 20 லட்சம் தரப்படவுள்ளது.

ரவுண்ட் 1 சுற்று

ரவுண்ட் 1 சுற்று

சூப்பர் 12 பிரிவுக்கு தகுதிப்பெறும் அணிகள் மட்டுமல்லாது ரவுண்ட் எனப்படும் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடும் 8 அணிகளுக்கும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதிச்சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடைபெறும். இதில் வெற்றி பெறும் ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ. 30 லட்சம் வீதம் ரூ. 3 கோடியே 60 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. இதே போல இந்த தகுதிச்சுற்றில் இருந்து 4 அணிகள் தான் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். மீதமுள்ள 4 அணிகள் வெளியேற்றப்படும். அப்படி வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ. 30 லட்சம் வீதம் 1 கோடியே 20 லட்சம் ஆறுதல் பரிசு அளிக்கப்படவுள்ளது. இது அனைத்து அணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Sunday, October 10, 2021, 17:47 [IST]
Other articles published on Oct 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+