இந்தியாவிற்கு மாற்றப்படுகிறதா டி-20 உலககோப்பை: ஐசிசி வெளியிட்ட சூசக அறிவிப்பு.. ரசிகர்கள் குழப்பம்
தாஜ் மஹாலின் புகைப்படத்துடன் ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு, டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு மாற்றப்பட்டுவிட்டதா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு வரும் அக்.17ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சமீபத்தில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான முழு போட்டி அட்டவணையையும் ஐசிசி வெளியிட்டிருந்தது. இந்தியா தனது முதல் போட்டியாக அக்டோபர் 24ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

அட்டவணை
டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதில் தேர்வு செய்யப்படும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். அந்த போட்டிகள் முழுவதும் அமீரகத்தில் உள்ள சார்ஜா, அபுதாபி, துபாய் நகரங்களில் நடக்கவிருக்கிறது.

புதிய அறிவிப்பு
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை குறித்து புதிய புகைப்படம் ஒன்றை ஐசிசி அமைப்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பெருமையாக கருதப்படும் தாஜ் மஹாலின் புகைப்படத்தை பதிவிட்டு அதில் டி20 உலகக்கோப்பை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கேப்ஷனில், மிகப்பெரும் சர்ப்ரைஸான விஷயம் ஒன்று வருகிறது. இன்று 3 மணிக்கு அது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியாவிலா?
தாஜ் மஹாலின் புகைப்படத்துடன் இதனை பதிவிட்டதால், ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கே டி20 உலகக்கோப்பை தொடர் கொண்டு வரப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ஏற்கனவே மைதானங்கள் உறுதி செய்யப்பட்டு, அட்டவணைகள் வெளியிடப்பட்டுவிட்டதால், கடைசி நேரத்தில் போட்டியின் இடத்தை மாற்றுவது சிரமமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தீம் பாடலா
இதுஒரு புறம் இருக்க டி20 உலகக்கோப்பை தொடருக்கான தீம் பாடல் இன்று வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா தான் இந்த முறை டி20 உலகக்கோப்பையை நடத்துவதால், இந்தியாவின் தாஜ் மஹாலை குறிப்பிட்டு பாடல் குறித்த அறிவிப்பினை வெளியிடுகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்பார்ப்பு
மற்றொருபுறம், அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறதா என்றும் ரசிகர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்தாண்டு இந்தியாவில் இருந்து அமீரகம் கொண்டு சென்றதால், ஏற்கனவே ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். எனவே அவர்களை குஷிப்படுத்த அடுத்த உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்தப்படுகிறதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எது எப்படியோ இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு வந்தவுடன் தெரிய வந்துவிடும்.


Click it and Unblock the Notifications