Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கோட்டை தாண்டி யாரும் வரக்கூடாது”.. டி20 உலகக்கோப்பையில் செய்யப்பட்ட விநோத ஏற்பாடு. போட்டோ படு வைரல்

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஐசிசி செய்துள்ள ஏற்பாடு ரசிகர்களிடையே வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

T20 World Cup-ஐ கைப்பற்ற Virat Kohli-க்கு இவங்க உதவுவாங்க- Jonty Rhodes

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் தகுதிச்சுற்றுப்போட்டிகள் முடிந்த தற்போது சூப்பர் 12 போட்டிகள் தொடங்கிவிட்டன.

சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

இந்தியாவில் நடைபெறவிருந்த இந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரின் போது குறிப்பிட்ட அளவிற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது முழு அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

இதற்காக ரசிகர்கள் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகளுடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் டி20 உலகக்கோப்பை போட்டிகளை காண உலகமெங்கும் இருந்தும் ரசிகர்கள் திணறுவார்கள் என்பதால் கொரோனா அச்சுறுத்தல் விதிமுறைகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதற்காக அபுதாபி மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷயம் சுவாரஸ்யமாக உள்ளது.

புதிய வசதி

புதிய வசதி

அதாவது ரசிகர்கள் அமரும் இடத்தில் இருக்கைகளை வைக்காமல், அதற்கு மாறாக வேலி போன்று அமைத்துள்ளனர். குறிப்பிட்ட இடைவெளிகளை விட்டு குழந்தைகள் படுக்கைகளை விட்டு எங்கும் சென்றுவிடாமல் இருக்க வைப்பது போன்று ரசிகர்கள் எங்கும் நகர்ந்து சென்றுவிடக்கூடாது என இது போன்ற வடிவமைத்துள்ளனர். இது ரசிகர்களிடையே வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற மைதானங்கள்

மற்ற மைதானங்கள்

இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா போட்டியின் போது இவை ஏற்படுத்தப்பட்டிருந்தது. மற்ற மைதானங்களிலும் இதே நடைமுறை பின்பற்ற முடியுமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இன்னும் வேறு சில ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகள் குழு ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 23, 2021, 17:26 [IST]
Other articles published on Oct 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+