Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடும் நெருக்கடி.. மீண்டும் அணிக்குள் வந்த அஸ்வின், சூர்யகுமார்.. இந்தியாவின் பக்கா ப்ளேயிங் 11!

அமீரகம்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகாக இந்திய அணி மீண்டும் டாஸை தோற்றுள்ளது. அணியில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இன்று ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தடுமாறும் இந்திய அணி

தடுமாறும் இந்திய அணி

இந்த தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற குறைவான வாய்ப்புகளே உள்ளன. மீதமுள்ள 3 போட்டிகளையும் வெற்றி பெற்றால் மட்டுமே ஏதேனும் அதிர்ஷ்டத்தால் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும். இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தானிடமும் இந்திய அணி தோல்வியை தழுவினால் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும்.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

இப்படிபட்ட முக்கியமான போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வியடைந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணியில் முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளார் கோலி. கடந்த போட்டியில் ஓப்பனிங்கில் இஷான் கிஷானை கொண்டு வந்து மொத்த டாப் ஆர்டர் பேட்டிங்கையும் மாற்றி அமைத்தது பெரும் பின்னடைவாக அமைந்தது. சூர்யகுமார் யாதவுக்கு முதுகு வலி இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய போட்டியில் மீண்டும் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் கொண்டு வரப்பட்டுள்ளார்.

பேட்டிங்

பேட்டிங்

ஓப்பனிங்கில் மீண்டும் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் விளையாடுகின்றனர். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி மற்றும் 2வது விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவை கொண்டு வந்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா விளையாடுகின்றனர்.

மீண்டும் அஸ்வின்

மீண்டும் அஸ்வின்

பந்துவீச்சிலும் மிக முக்கியமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 போட்டிகளிலுமே வருண் சக்கரவர்த்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அனுபவ வீரர் அஸ்வினை ஏன் களமிறக்கவில்லை என விமர்சனங்கள் இருந்தது. இந்நிலையில் அணிக்குள் மீண்டும் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வின் மட்டும் ஜடேஜா ஜோடி மீண்டும் சேர்ந்துள்ளனர்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா

Story first published: Wednesday, November 3, 2021, 20:08 [IST]
Other articles published on Nov 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+