Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடி ஆட்டமா? குறைந்த ஸ்கோர் மேட்ச்சா?.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட்- விவரம்

அமீரகம்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கிய போட்டியாக இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் மோதும் போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்வதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. குறிப்பாக உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியை வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் அணி போராடி வருகிறது. எனவே இந்த முறையாவது வீழ்த்திவிட வேண்டும் என சூப்பர் வீரர்களுடன் களமிறங்குகிறது. பதிலுக்கு இந்திய அணியும் தொடர்ச்சியாக 2 பயிற்சி போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. போட்டி நடைபெறும் துபாய் பிட்ச்சானது பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் ரன் மழை பொழிவதை காணலாம். இதனால் அதிக ஸ்கோர் மேட்ச்சாக தான் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

பவுலிங்

பவுலிங்

பந்துவீச்சைப்பொறுத்தவரை ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளார்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். முதல் சில ஓவர்களில் ரன்கள் கசிவதால், மிடில் ஓவர்களில் தக்கவைக்க முடியும். கடைசி சில ஓவர்களில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகும். அதாவது பந்து பழையதானவுடன் தான் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும்.

டாஸ் வென்றால் என்ன ஆகும்

டாஸ் வென்றால் என்ன ஆகும்

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 168 ரன்கள் குவிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பேட்டிங் பிட்ச்-ஆக இருப்பதால் டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் பந்துவீச்சையே முதலில் தேர்வு செய்யும். ஏனென்றால் இங்கு 60 சதவீத வெற்றிகள் 2வதாக பேட்டிங் செய்து வந்தவையே ஆகும். இதனால் இன்று சிக்ஸர் மழையை எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, October 24, 2021, 21:56 [IST]
Other articles published on Oct 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+