Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. எந்தவித சிரமும் இன்றி அரையிறுதி வாய்ப்பு.. காரணம் என்ன?

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப்போட்டி வரை செல்வதற்கு சூப்பர் லக் ஒன்று அடித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் தகுதிச்சுற்றுப்போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளதால், ரசிகர்களின் கவனம் அதன் மீது திரும்பியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்த முறை எந்த அணிக்கும் சாதகம் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த முறை கோப்பை வெல்லப்போவது யார் என்ற பேச்சு தான் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என 4 அணிகள் மிகவும் பலத்துடன் களம் கண்டுள்ளது.

சூப்பர் 12 சுற்று

சூப்பர் 12 சுற்று

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு மிகவும் சுலபமாக செல்வதற்கான அதிர்ஷ்டம் இந்திய அணிக்கு அடித்துள்ளது. இதற்கு காரணம் தகுதிச்சுற்று ஆட்டங்கள் தான். சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக 8 அணிகள் தகுதிப்பெற்றுவிட்டன. மீதமுள்ள 4 இடங்களுக்காக வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் மல்லுக்கட்டின. இந்த தகுதிச்சுற்றின் இறுதியில் ஸ்காட்லாந்து, வங்கதேசம், இலங்கை அணிகள் சூப்பர் 12-க்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியுள்ளது.

எந்தெந்த பிரிவுகள்

எந்தெந்த பிரிவுகள்

இந்த தகுதிச்சுற்றில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த வங்கதேசம் அணி முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியப்படும் விதமாக 2வது இடம் பிடித்து சூப்பர் 12 பிரிவில் குரூப் ஏ-க்கு தேர்வாகியுள்ளது. அதில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் தான் உள்ளது. தகுதிச்சுற்றில்முதலிடம் பிடித்த ஸ்காட்லாந்து அணி குரூப் பி பிவுக்கு தகுதிப்பெற்றுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை, வங்கதேச அணிகள்

இலங்கை, வங்கதேச அணிகள்

இதே போல தகுதிச்சுற்றில் மற்றொரு பிரிவான குரூப் - 1ல் இலங்கை ஏற்கனவே முதலிடத்தை உறுதி செய்துவிட்டது. எனவே அந்த அணி சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவுக்கு தான் சென்றுள்ளது. இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் 2 பிரிவில் இடம்பெறவில்லை. இந்த பிரிவில் நமீபியா அல்லது ஐயர்லாந்து அணிகளில் ஏதேனும் ஒன்று தான் வரவுள்ளது.

இந்திய அணிக்கு அதிர்ஷ்டம்

இந்திய அணிக்கு அதிர்ஷ்டம்

தகுதிச்சுற்றின் இந்த முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதாவது லீக் போட்டிகளின் போது பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா அல்லது ஐயர்லாந்து அணிகளுடன் மட்டும் தான் இந்திய அணி மோதவுள்ளது. இதில் நியூசிலாந்தை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளை விடவும் இந்திய அணி வலிமையானதாகும். ஆனால் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிக்கு செல்ல மோதிக்கொள்ளப்போகிறது.

Story first published: Friday, October 22, 2021, 17:23 [IST]
Other articles published on Oct 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+