Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 ஓவர்களில் வெற்றி.. ராகுலின் அதிவேக அரைசதம்..ஸ்காட்லாந்தை பந்தாடிய இந்தியா..அரையிறுதிக்கு செல்லுமா

அமீரகம்: ஸ்காட்லாந்து அணியை துவம்சம் செய்து இந்திய அணி அட்டகாசமான வெற்றியை பதிவு செய்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் முதல் முறையாக கோலி டாஸை வென்றுள்ளார்.

டாஸிலேயே அதிர்ஷ்டம்

டாஸிலேயே அதிர்ஷ்டம்

அதிக ரன்ரேட்டுடன் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி தனது ப்ளானை பக்காவாக முடித்தது. முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் இந்திய பவுலர்கள். ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்களும், பும்ரா 2 விக்கெட்களும், அஸ்வின் 1 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர். இதனால் 17.4 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 85 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியாவின் ப்ளான்

இந்தியாவின் ப்ளான்

86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் மரண காட்டு காட்டியது. இலக்கை 8 ஓவர்களுக்கு அடைந்தால் ரன் ரேட்டில் ஆஃப்கானிஸ்தான் அணியை விட இந்திய அணி முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. எனவே ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர், பவுண்டரி என விளாசித்தள்ளினர்.

ராகுல் அட்டகாசம்

ராகுல் அட்டகாசம்

16 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 30 ரன்களை எடுத்து வெளியேறினார். மறுமுணையில் அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளை அடித்தார். இதனால் 6.3 ஓவர்களுக்குள் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

ரன் ரேட் உயர்வு

ரன் ரேட் உயர்வு

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் ரன் ரேட் + 1.619 ஆக உயர்ந்து ஆஃப்கானிஸ்தானை புள்ளிப்பட்டியலில் பின்னுக்கு தள்ளியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அக்டோபர் 7ம் தேதியன்று மோதுகிறது. இதில் ஒருவேளை நியூசிலாந்து அணி தோல்வியடைந்தால், ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவால் அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 5, 2021, 22:18 [IST]
Other articles published on Nov 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+