Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு முன் சூர்யகுமார் களமிறங்கியது ஏன்? காரணம் கேட்டு மெய்சிலிர்ந்த ரசிகர்கள்..என்னா பெருந்தன்மை

அமீரகம்: நம்பியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் ஏன் களமிறங்கினார் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது. எனினும் நேற்று கடைசி லீக் ஆட்டத்தில் நமிபியா அணியை எதிர்த்து விளையாடியது.

இந்த போட்டியுடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதால் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது.

கடைசி போட்டி

கடைசி போட்டி

இப்போட்டியில் டாஸ் வென்ற கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய நமிபியா அணியில் சீரான வேகத்தில் ரன்கள் உயர்ந்தாலும் விக்கெட்களும் சரிந்துக்கொண்டே இருந்தன. இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அபார வெற்றி

அபார வெற்றி

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் வீரர்கள் துவம்சம் செய்தனர். 37 பந்துகளை சந்தித்த ரோஹித் ஷர்மா 56 ரன்களும் 36 பந்துகளை சந்தித்த கே.எல்.ராகுல் 54 ரன்களும் விளாசினார். இந்திய அணி 86 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் அவுட்டானார். இதன்பின்னர் முதல் விக்கெட்டிற்கு கோலி களமிறங்கி கேப்டனாக தனது கடைசி ஆட்டத்தில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் களமிறங்கவில்லை.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

ஆட்டத்தின் இப்படிபட்ட சூழலில் கோலி தான் முதல் விக்கெட்டிற்கு களமிறங்குவார். ஆனால் நேற்றைய போட்டியில் திடீரென சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டார். இதனால் ஹெல்மெட் மற்றும் பேட்களை அணிந்துக்கொண்டு தயாராக இருந்த கோலி கடைசி வரை களத்திற்கு வராமலேயே போனதால் இந்திய ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

 கோலி கொடுத்த விளக்கம்

கோலி கொடுத்த விளக்கம்

இந்நிலையில் கோலியின் இந்த முடிவுக்கான காரணம் குறித்து தெரியவந்துள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய கோலி, இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் களமிறங்கி தனது திறமையை காட்ட போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதுபோன்ற மிகப்பெரும் தொடர்களில் ஒருபோட்டியிலாவது இளம் வீரர்கள் சோபிக்க வேண்டும். எனவே கடைசி போட்டியிலாவது சரியான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தேன். இதனால்தான், எனக்கு முன்னாள் அவர் களமிறங்கினார். நான் அணிக்காக ஒரு பேட்ஸ்மேனாக தொடர்ந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவேன் எனக் கோலி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, November 9, 2021, 18:26 [IST]
Other articles published on Nov 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+