Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“தலைகீழாக தான் குதிப்பேன்” ஆஃப்கானின் பிடிவாதத்தால் இந்திய அணிக்கு தலைவலி.. நபிக்கு குவியும் ஆலோசனை

அமீரகம்: ஆஃப்கானிஸ்தான் அணியின் வீம்புத்தனம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு எமனாக உள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு யார் முன்னேறுவார் என்ற மிக முக்கியமான போட்டியாக இது பார்க்கப்படுகிறது.

அரையிறுதி சுற்று

அரையிறுதி சுற்று

குரூப் "பி"யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றன. இன்று நடைபெறும் போட்டியில் ஒருவேளை நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். மாறாக ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் அணி தேர்வு செய்யப்படும்.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

அந்தவகையில் இந்திய அணி அடுத்ததாக நமீபியாவை வீழ்த்திவிட்டால், இந்தியா அரையிறுதிக்கு சென்றுவிடும். இதனால், இன்று நடைபெறும் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் கனவுக்கு ஆஃப்கானிஸ்தானின் பிடிவாதத்தனம் தலைவலியை கொடுத்துள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

போட்டி நடைபெறும் அபுதாபி மைதானம் சமீப நாட்களாக பேட்டிங்கிற்கு மிக சாதகமாக உள்ளது. எனவே இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே சிறந்ததாக உள்ளது. இந்த தொடரில் இதுவரை இங்கு நடைபெற்ற 7 போட்டிகளில் 6 முறை சேஸ் செய்த அணிகள்தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த டாஸ் முறையில் சற்றும் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆஃப்கானிஸ்தான் அணி.

இந்திய ரசிகர்கள் கவலை

இந்திய ரசிகர்கள் கவலை

ஆஃப்கான் அணியை பொறுத்தவரை டாஸ் வென்று பேட்டிங் செய்ய வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள். அவர்கள் என்ன ஆனாலும் முதலில் விளையாடி பேட்டை சுழற்ற வேண்டும் என நினைக்கின்றனர். இதனால் இந்த முக்கிய போட்டியில் தவறான முடிவை எடுத்து ஒருவேளை தோல்வியடைந்துவிடுமோ என இந்திய ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Story first published: Sunday, November 7, 2021, 12:07 [IST]
Other articles published on Nov 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+