Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த விஷயத்தில் ஆஃப்கான் செய்த பிடிவாதம்.. கனவாகவே போகிறதா இந்தியாவின் அரையிறுதி கனவு.. பின்னணி என்ன

அமீரகம்: ஆஃப்கானிஸ்தான் அணியின் பிடிவாதத்தால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கனவாகவே போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மிக முக்கிய போட்டியாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டால், இந்திய அணி அரையிறுதிக்கு சென்றுவிடும்.

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

குரூப் "பி"யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் ஒருவேளை நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். மாறாக ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் அணி தேர்வு செய்யப்படும் என்ற நிலை இருந்தது.

ஆஃப்கானின் வீம்பு

ஆஃப்கானின் வீம்பு

இந்த முக்கியமான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்றால் பந்துவீச்சை தேர்வு செய்வதே சிறந்த தேர்வாக இருக்கும் எனக்கூறப்பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணி டாஸை வென்றும் பிடிவாதம் காரணமாக பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டது.

சொதப்பல் பேட்டிங்

சொதப்பல் பேட்டிங்

நியூசிலாந்து அணியின் உலக தரம் வாய்ந்த பவுலர்கள், ஆஃப்கானை சுருட்டிவிட்டனர். தொடக்க வீரர்கள் ஹச்ரதுல்லா (2), முகமது செஷாத் (4) என அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த குர்பாஸ் (6), குல்பாதின் (15) ஆகியோரும் ஏமாற்றமே கொடுத்ததால் ஆஃப்கானிஸ்தான் அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது.

எளிய இலக்கு

எளிய இலக்கு

அந்த அணியில் அனைத்து வீரர்களும் சொதப்ப நஜிபுல்லா மட்டுமே ஒற்றையாளாக போராடினார். 48 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கான் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அபுதாபி பிட்ச்-ல் இந்த இலக்கை நியூசிலாந்து சுலபமாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஃப்கானின் பிடிவாதத்தால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கனவாகவே போய்விடுமோ என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Story first published: Sunday, November 7, 2021, 23:47 [IST]
Other articles published on Nov 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+