Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பாக். வெற்றிக்காக பிரார்த்திக்கும் இந்தியா” அரையிறுதி வாய்ப்பில் வந்த புது சிக்கல்.. காரணம் என்ன?

அமீரகம்: பாகிஸ்தானின் வெற்றிக்காக இந்திய அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு சார்ஜா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

தனது முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான், இன்று அதே நம்பிக்கையுடன் நியூசிலாந்தை வீழ்த்த தயாராகி வருகிறது.

 முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

இன்று நடைபெறும் போட்டியில் இரு அணிகளுக்குமே மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நியூசிலாந்தை மட்டும் வீழ்த்திவிட்டால், பாகிஸ்தானுக்கு இன்னும் நமிபியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து என சிறிய அணிகளுடனான போட்டியே உள்ளது. இதனால் 5 வெற்றிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். நியூசிலாந்துக்கு இது முதல் போட்டி என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் தான் இந்தியா அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஒருவேளை நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கப்போகிறது.

Recommended Video

IND Vs PAK கதறி அழுத Babar Azam’-ன் தந்தை video goes viral | Oneindia Tamil
கெத்தாக நிற்கும் பாக்

கெத்தாக நிற்கும் பாக்

குரூப் 'பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த குரூப்பில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி தான் அரையிறுதிக்கு செல்லும். இதில் ஏற்கனவே இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இன்று நியூசிலாந்துடன் வெற்றி, தோல்வி என எது பெற்றாலும் மீதம் 3 சிறிய அணிகள் உள்ளன. இதனால் 4 வெற்றிகளுடன் கெத்தாக பாகிஸ்தான் அரையிறுதி செல்லும்.

 அரையிறுதி

அரையிறுதி

இந்தியாவை பொறுத்தவரை இன்னும் மீதமுள்ள 4 போட்டிகளில் நியூசிலாந்து மட்டுமே பெரிய அணியாக இருக்கிறது. இந்த அணியை வென்றுவிட்டால் மீதமுள்ள மூன்று சிறிய அணிகளை சுலபமாக வென்று 4 வெற்றிகளுடன் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தும். ஆனால் இதே வாய்ப்பு நியூசிலாந்துக்கும் உள்ளது. ஒருவேளை இன்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுவிட்டால். மீதம் இந்தியா மற்றும் 3 சிறிய அணிகளுடன் போட்டி இருக்கும். இதில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தால் கூட மற்ற அணிகளை நியூசிலாந்து வென்றுவிடும். எனவே அந்த அணியும் 4 வெற்றிகளுடன் அரையிறுதி வாய்ப்பு கேட்டு நிற்கும்.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

இதனால் இன்று நியூசிலாந்து தோல்வியடைந்து விட்டால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி முதல் அணியாக அரையிறுதி சென்றிவிடும். பின்னர் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தி 4 வெற்றிகளுடன் 2வது இடத்தை பிடிக்கும். இதற்காக இன்று நியூசிலாந்து தோற்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Story first published: Tuesday, October 26, 2021, 16:33 [IST]
Other articles published on Oct 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+