Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“முதல்ல நீங்க சரியானு பாருங்க” ஷமி மீது மதரீதியான தாக்குதல்..இந்திய ரசிகர்களுக்கு பாக்.வீரர் அட்வைஸ்

அமீரகம்: இந்திய வீரர் முகமது ஷமி மீது எழுந்து வரும் மத ரீதியாக விமர்சினங்களுக்கு பாகிஸ்தான் அணி வீரர் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

Shami-ஐ குறிவைக்கும் விஷமிகள்.. Indian Team தோல்விக்கு மத ரீதியான தாக்குதல்

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்திய வீரர்கள் மீது கோபத்தில் உள்ளனர்.

மத ரீதியான தாக்குதல்

மத ரீதியான தாக்குதல்

இது ஒரு புறம் இருக்க இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதுவும் குறிப்பாக அவர் இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்தவர் என்பதால் வேண்டுமென்றே சுலபமாக பந்துவீசியதாக சில வஞ்சக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

காரணம்

காரணம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி வீசிய 18 வது ஓவரில் மட்டும் 17 ரன்கள் சென்றது. இதனால் ஆந்த ஓவரிலேயே பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தோல்வி அதற்கு முன்பே உறுதியாகிவிட்டது. எனவே முகமது ஷமிக்கு ஆதரவாக முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

திடீர் ஆதரவு

திடீர் ஆதரவு

இந்நிலையில் இந்த சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தலையிட்டுள்ளார். முகமது ஷமிக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ள அவர், ஒரு வீரர், தனது நாட்டிற்காக தாங்கிக்கொள்ளும் அழுத்தங்கள், கஷ்டங்கள், தியாகங்கள் ஆகியவை கணக்கில்லாதது. முகமது ஷமி ஒரு உலகின் தலைசிறந்த பவுலர். உங்கள் நாட்டு வீரர்களை நீங்கள் முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். கிரிக்கெட் என்பது மக்களை ஒன்றிணைக்கிறது. தயவு செய்து மக்களை பிரிக்காதீர்கள்.

பிசிசிஐ அமைதி

பிசிசிஐ அமைதி

இந்த பிரச்னை குறித்து முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் ஆதரவுக்குரல் வெளியிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் வீரர் கூட குரல் கொடுத்துவிட்டார். ஆனால் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் கவுன்சில் இதுவரை எந்தவிதமான அறிக்கையும் வெளியிடவில்லை. இதனால் பிசிசிஐ மீதே ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

Story first published: Tuesday, October 26, 2021, 16:45 [IST]
Other articles published on Oct 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+