“எப்படானு திரியுற நீ” பத்திரிகையாளர் சந்திப்பில் ஜடேஜா செய்த குசும்புத் தனம்.. வைரலாகும் மீம்ஸ்!
அமீரகம்: பத்திரிகையாளர் சந்திப்பின் போது ரவீந்திர ஜடேஜா தெரிவித்த சுவாரஸ்ய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இக்கட்டான சூழலில் சிக்கி தவித்து வருகிறது.
இந்த தொடரில் 3 வெற்றிகளை பெற்றாலும், இந்திய அணி அரையிறுதிக்கு செல்லுமா என்பதை நிர்ணயிக்கக்கூடிய போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.

இந்தியாவுக்கு சிக்கல்
இன்று நடைபெறும் லீக் போட்டியில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ஒருவேளை நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். மாறாக ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் அணி தேர்வு செய்யப்படும். அந்த வகையில் அதிக ரன்ரேட்டுடன் இருக்கும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

முக்கிய கேள்வி
இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சுவாரஸ்ய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஜடேஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

ஜடேஜாவின் குசும்பு
இதற்கு தீவிரமாக யோசனை செய்த ஜடேஜா, ஆஃப்கானிஸ்தான் தோல்வியடைந்துவிட்டால், இந்திய அணி பொட்டிப்படுகையெல்லாம் கட்டிக்கொண்டு ஊர் திரும்பவேண்டியது தான். வேறு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள் என சிரித்த படி கூறினார். இந்த பதிலால் செய்தியாளர் சந்திப்பு அறை ஒரு நிமிடம் ஷாக் ஆனது.

ரசிகர்கள் விமர்சனம்
இந்நிலையில் ஜடேஜாவின் கருத்து குறித்து மீம்ஸ் பரவி வருகிறது. அதாவது விராட் கோலி பெரும் சிரமப்பட்டு இந்திய அணியின் ரன் ரேட்டை உயர்த்த நம்பிக்கையுடன் இருந்தால், ஜடேஜா எப்போதுதான் ஊருக்கு செல்வோம் என்று சுற்றி வருவதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications