Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எவ்வளவு சதம் அடிச்சாலும் வேஸ்ட் தான்”.. கோலியின் கேப்டன்சி சொதப்பல்.. புலம்பி தள்ளிய ரோகித்!

அமீரகம்: கோப்பையை வெல்லாமல் எவ்வளவு ரன்கள் அடித்திருந்தாலும், அது எதற்குமே பலனில்லாதது தான் என ரோகித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளிலும் படு தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பு கையைவிட்டு போகும் சூழல் உள்ளது.

 இந்தியாவின் சொதப்பல்

இந்தியாவின் சொதப்பல்

இந்த டி20 உலகக்கோப்பை தொடர் விராட் கோலிக்கு மிக முக்கியமானதாகும். இந்த தொடருடன் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார். அவருக்கு பதிலாக இனி முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா செயல்படவுள்ளார். எனவே இவர்களுக்குள் மோதல் போக்கு நிலவி வருவதாக தகவல் கசிந்தன. இந்நிலையில் அதனை மறைமுகமாக ரோகித் வெளிக்காட்டியுள்ளார்.

 ரோகித்தின் பேட்டி

ரோகித்தின் பேட்டி

இந்திய அணியின் தொடர் தோல்விகள் குறித்து அவர் பேசியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை நான் பல அனுபவங்களை பெற்றுள்ளேன். ஆட்டத்தை புரிந்து அதற்கேற்ப செயல்பட கற்றுக்கொண்டுள்ளேன். நமது தனிப்பட்ட ஆட்டத்தை விட அணிக்கு அந்த சமயத்தில் என்ன தேவையோ, அதனை கொடுக்க வேண்டும் என்பது முக்கியம். அதனை தான் நான் செய்து வருகிறேன்.

மறைமுக விமர்சனம்

மறைமுக விமர்சனம்

2019ம் ஆண்டு உலகக்கோப்பை எனக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. நான் நிறைய ரன்களை குவித்தேன். நாம் போட்டு வைத்த திட்டங்கள் சில நாட்களில் உதவும் என்பார்கள். அன்று அது எனக்கு உதவியது. ஆனால் எவ்வளவு சதங்கள் அடித்தாலும், எவ்வளவு ரன்கள் குவித்தாலும் என்ன பலன். ஒரு அணி கோப்பையை வெல்லவில்லை என்றால் நாம் அடித்த அத்தனை ரன்களும், சதங்களும் வேஸ்ட் தான். எனவே எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும். கோலி ஐசிசி கோப்பைகளை வென்றுக்கொடுக்காதது மிகப்பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. அதனை ரோகித் சர்மா தற்போது மறைமுகமாக குத்திக்காட்டி பேசியுள்ளது ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Recommended Video

India Team ட்ரெஸ்ஸிங் பெரிய ரூமில் குழப்பம் இருக்கு - முன்னாள் வீரர் சொன்ன தகவல்
பேட்டை சுழற்றினால் போதும்

பேட்டை சுழற்றினால் போதும்

தொடர்ந்து பேசிய அவர், இன்று பல்வேறு வீரர்கள் சகஜமாக சதங்களை விளாசுகிறார்கள். ஏனென்றால் டி20 கிரிக்கெட்டின் தன்மை அது. மேலும் போட்டியில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்போதெல்லாம், பயமுன்றி பேட்டை சுழற்றினால் போதும் என்ற சூழல் உள்ளது. ஒருவேளை அவுட்டானால் என்ன செய்வது என்ற கவலையெல்லாம் யாருக்கும் இல்லை என ரோகித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, November 5, 2021, 17:01 [IST]
Other articles published on Nov 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+