Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘திறமை இருந்தும் வாய்ப்பு இல்லை’ ரோகித்தால் ஏமாந்த இளம் வீரர்.. ப்ளேயிங் 11 பிரச்னைக்கு தீர்வு

அமீரகம்: டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இஷான் கிஷானுக்கான இடம் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் அக்டோபர் 24ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இந்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புகள் தான் தற்போது அதிகளவில் எழுந்துள்ளது. இதனை நிர்ணயம் செய்வதற்காக இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாடியது. ஆனால் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற போதும் யாரை ப்ளேயிங் 11ல் எடுப்பது என்ற குழப்பம் அதிகரித்துள்ளது.

இஷானின் அட்டகாசம்

இஷானின் அட்டகாசம்

குறிப்பாக திறமையை நிரூபித்தும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்காத சூழல் எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணியில் இஷான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் விளையாடினர். இதில் இருவருமே அரைசதம் அடித்து அசத்தினர். 46 பந்துகளை சந்தித்த இஷான் கிஷான் 70 ரன்களை குவித்தார். ஆனால் மிடில் ஆர்டரில் இவரை களமிறக்கினால் சற்று வேகம் எடுக்க தடுமாறுவதால் ஓப்பனிங் மட்டுமே கிஷானின் தேர்வாக உள்ளது.

மிரட்டிய ரோகித்

மிரட்டிய ரோகித்

எனவே ரோகித்தை உட்காரவைத்துவிடுவார்களா என்ற கேள்வி அனைவரின் பக்கமும் திரும்பியது. ஆனால் அதற்கு ரோகித் சர்மா இடமே கொடுக்கவில்லை. இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் 41 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதன் மூலம் கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா ஜோடியே ஓப்பனிங் விளையாடவுள்ளது உறுதியாகியுள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

முதல் விக்கெட்டிற்கு கேப்டன் கோலியும், 2வது விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவும் இருப்பதால் இஷானுக்கான வாய்ப்பு அணியில் இருந்து பறிபோகிறது. இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்படும் இளம் வீரர் ஃபுல் ஃபார்மில் இருக்கும் போதும் அவரை பயன்படுத்தாத சூழல் ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை கொடுத்துள்ளது.

Story first published: Wednesday, October 20, 2021, 21:14 [IST]
Other articles published on Oct 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+