For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலகக்கோப்பையில் கவனம் ஈர்த்த 12வயது சிறுமி.. நன்றிகடன்பட்ட கிரிக்கெட் வாரியம்..சுவாரஸ்ய நிகழ்வு

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் கலக்கி வரும் ஸ்காட்லாந்து அணி, கிரிக்கெட்டிற்காக 12 வயது சிறுமி செய்த உதவி குறித்து சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது.

ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 17 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 23ம் தேதி தொடங்கும் சூப்பர் 12 பிரிவு சுற்றுக்கு முன்னேறும்.

சிறிய அணி

சிறிய அணி

இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்து வருகிறது ஸ்காட்லாந்து அணி. தனது முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்ட அந்த அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆச்சரியம் கொடுத்தது.

2வது வெற்றி

2வது வெற்றி

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டத்திலும் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. வங்கதேசம் ஆதிக்கம் செலுத்தும் என நினைக்கப்பட்ட இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 12 வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அடுத்ததாக ஓமன் அணியுடன் நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் சூப்பர் 12 சுற்றுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழையும்.

கவனத்தை ஈர்த்த ஜெர்ஸி

கவனத்தை ஈர்த்த ஜெர்ஸி

இந்த தொடரில் ஸ்காட்லாந்த் அணியின் ஆட்டம் எந்த அளவிற்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோ, அதே அளவிற்கு அவர்கள் அணிந்துள்ள ஜெர்ஸியும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஊதா மற்றும் கருப்பு நிறங்கள் கொண்ட கலவையில் அந்த அணியின் பெயர் அச்சிடப்பட்டு ட்ரெண்டிங்காக உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் திறமை

சிறுமியின் திறமை

ஸ்காட்லாந்து அணியின் ஜெர்ஸி குறித்த பேச்சுக்கள் அதிகளவில் எழுந்த நிலையில் அதனை உருவாக்கியவர் குறித்த உண்மையை வெளியிட்டுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். அதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஸ்காட்லாந்து அணி ஜெர்ஸியை உருவாக்கியது ஹேடிங்டனைச் சேர்ந்த ரெபேக்கா டவுனி என்ற 12 வயது சிறுமியே ஆகும். இதற்காக அந்த சிறுமிக்கு நன்றியையும் கூறியுள்ளது கிரிக்கெட் வாரியம்.

ஜெர்ஸிகாக போட்டி

ஜெர்ஸிகாக போட்டி

டி20 உலகக்கோப்பை ஜெர்ஸியை உருவாக்க ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் போட்டி ஒன்றை நடத்தியுள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் ரெபேக்காவின் டிசைன் வெற்றி பெற்றுள்ளது. ஸ்காட்லாந்தின் தேசிய சின்னமான 'திஸ்சில்' எனப்படும் செடியின் நிறங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சீருடையை அவர் வடிவமைத்துள்ளார். அவரது வடிவமைப்பில் தயாரான முதல் சீருடை, அவருக்கே பரிசாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 20, 2021, 21:13 [IST]
Other articles published on Oct 20, 2021
English summary
Scotland Team's T20 World Cup jersey designed by 12 year old girl
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+