Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“குருநாதா..” கோலியின் மாஸ்டர் பேட்டிங்.. வாயடைத்துப்போன இளம் வீரர்கள்.. வைரலாகும் வீடியோ!

அமீரகம்: விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலை பார்த்து இளம் வீரர்கள் வாயடைத்துப்போன வீடியோ வைரலாகி வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் மோதும் போட்டி வரும் அக்டோபர் 31ம் தேதியன்று இரவு 7 மணிக்கு துபாயில் நடைபெறவிருக்கிறது.

நியூசிலாந்து போட்டி

நியூசிலாந்து போட்டி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக செய்த தவறுகளை இதில் சரிசெய்ய வீரர்கள் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பினர். விராட் கோலி மட்டுமே கடும் அழுத்தங்களுக்கு இடையேயும் அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினார்.

கோலி அரைசதம்

கோலி அரைசதம்

கடந்த சில போட்டிகளில் விராட் கோலியின் ஃபார்ம் மோசமாக இருந்ததாக கூறி ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். ஆனால் ஒரே போட்டியில் கிங் கோலி என்பதை நிரூபித்து காட்டினார். குறிப்பாக நெருக்கடியான நேரங்களில் எப்படி பதற்றமின்றி செயல்படவேண்டும் என்பதை இளம் வீரர்கள் பலரும் கற்றுக்கொண்டனர்.

கோலி வீடியோ

கோலி வீடியோ

இந்நிலையில் அதற்கு ஒரு உதாரணம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள விராட் கோலி தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தடுப்பாட்டம் மற்றும் சிக்ஸருக்கு விளாசுவது போன்ற பயிற்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்து வேடிக்கை பார்த்து வந்த ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் வாயைப்பிளந்து பார்த்தனர்.

Recommended Video

Ind Vs NZ Virat Kohliக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால் | Oneindia Tamil
 அசந்துப்போன வீரர்கள்

அசந்துப்போன வீரர்கள்

ஒவ்வொரு பந்தையும் விராட் கோலி எப்படி எதிர்கொள்கிறார், அவரின் ஸ்டைல், நிதானம் என அனைத்தையும் பார்த்து ரசித்த அவர்கள் இருவரும், ஒவ்வொரு பந்தை அடிக்கும் போதும் "சூப்பர்.. ஃபர்ஸ் க்ளாஸ்" என வியப்படைந்துக்கொண்டே இருந்தனர். இதுகுறித்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டு வைரலாகி வருகிறது.

ரசிகர் பட்டாளம்

சர்வதேச அளவில் விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக அவரின் கவர் ட்ரைவ் மற்றும் கவர் திசையில் அவர் சிக்ஸர் விளாசுவதற்கும் ஏகபோகத்திற்கு ரசிகர்கள் உண்டு. பாகிஸ்தான் போட்டியை போலவே நியூசிலாந்து ஆட்டத்திலும் நிச்சயம் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, October 29, 2021, 16:49 [IST]
Other articles published on Oct 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+