For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் கொடுத்த சூப்பர் கம்பேக்.. ஆடிப்போன ஆஃப்கான்..டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

அமீரகம்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அசுரத்தனமான வெற்றியை பெற்றது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.

அசத்தல் ஓப்பனிங்

அசத்தல் ஓப்பனிங்

கடந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மிக மோசமாக சொதப்பியது. ஆனால் இந்த போட்டியில் இந்தியாவின் ஓப்பனிங் ஜோடி பொளந்து கட்டினர். தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 140 ரன்களை சேர்த்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

47 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 74 ரன்களை விளாசினார். அவர் அவுட்டான சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். 48 பந்துகளை சந்தித்த அவர், 69 ரன்களை விளாசினார். இதன் பின்னர் வந்த ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 27 ரன்களும், பாண்ட்யா 13 பந்துகளில் 35 ரன்களும் விளாச 20 ஒவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது.

தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா (13), முகமது செஷாத் (0) என அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த வீரர்களாலும் அதிரடி காட்ட முடியவில்லை. அஸ்வினின் சுழலில் சிக்கி ரன் ரேட் கட்டுக்குள் வந்தது.

வெற்றி

வெற்றி

ரஹ்மானுல்லா குர்பாஸ் (19), குல்பதின் நயிப் (18), நஜிபுல்லா (11) என வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதன் பின்னர் வந்த கேப்டன் முகமது நபி (35) ரன்களும், கரீம் ஜனாத் (30) ரன்களும் விளாசி விடாப்பிடியாக போராடினர். இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர்களில்

அஸ்வினின் கம்பேக்

அஸ்வினின் கம்பேக்

நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அஸ்வின் இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இவருடன் முகமது ஷமி 3 விக்கெட்களும், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Story first published: Wednesday, November 3, 2021, 23:25 [IST]
Other articles published on Nov 3, 2021
English summary
Team India beats Afghanistan by 66 runs, clinches the 1st victory in T20 Worldcup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+