Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி கொடுத்த ட்விஸ்ட்.. நம்பியாவை வெளுத்து வாங்கிய இந்தியா.. அட்டகாசமாக முடிந்த கடைசி ஆட்டம்!

அமீரகம்: நமிபியா அணியை வெளுத்து வாங்கி தனது கடைசி லீக் ஆட்டத்தை நிறைவு செய்தது இந்திய அணி.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின.

இந்தியா ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டாலும், விராட் கோலிக்கு டி20 கேப்டனாக இது கடைசி போட்டி என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்திய அணி

இந்திய அணி

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நமீபியா அணியில் ஓப்பனிங் சற்று நன்றாக தொடங்கினாலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஓப்பனிங் வீரர் பார்ட் (21), மைக்கேல் (14) ஆகியோர் வெளியேறினர். இதனையடுத்து வந்த கிரேயக் வில்லியம்ஸ் டக் அவுட் ஆனார். கேப்டன் எராஸ்மஸும் 12 (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

சுருட்டிய ஸ்பின்னர்ஸ்

சுருட்டிய ஸ்பின்னர்ஸ்

இதன் பின்னர் வந்த வீரர்களும் பெரியளவில் சோபிக்காமல் நடையை கட்டியதால், 20 ஓவர்கள் முடிவில் நமிபியா அணி 8 விக்கெட்களை இழந்து 132 ரன்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். ஜஸ்பரீத் பும்ரா தனது பங்கிற்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதிரடி காட்டிய ரோகித்

அதிரடி காட்டிய ரோகித்

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா தொடகக்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் கேட்ச் பிடிக்க நமியியா தவறியது. இதனால் அவர் அந்த அணியின் பந்துவீச்சை வெளுத்துக்கட்டினார். 37 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 56 ரன்கள் சேர்த்தார்.

அபார வெற்றி

அபார வெற்றி

அவருடன் மறுமுணையில் நின்று விளையாடிய கே.எல்.ராகுல் 54 ரன்கள் விளாசினார். முதல் விக்கெட்டிற்கு கோலி களமிறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. எனினும் சூர்யகுமார் யாதவ் கடைசி நேர அதிரடி காட்ட 15.2 ஓவர்களிலேயே இந்திய அணி விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடரில் 3 வெற்றிகளை பெற்ற போதும் அரையிறுதிக்கு செல்ல முடியவில்லை என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Story first published: Monday, November 8, 2021, 22:50 [IST]
Other articles published on Nov 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+