Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்காட்லாந்தை சுளுக்கெடுத்த இந்திய அணி.. 87 ரன்களுக்கு ஆல் அவுட்.. காத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு

அமீரகம்: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் அதிக ரன் ரேட்டுடன் இந்திய அணி வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

டாஸிலேயே அதிர்ஷ்டம்

டாஸிலேயே அதிர்ஷ்டம்

மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் கோட்சரை 1 ரன்னுக்கு வெளியேற்றினார் ஜஸ்பிரித் பும்ரா.

சிக்கல் கொடுத்த முன்சே

சிக்கல் கொடுத்த முன்சே

மறுமுணையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே இந்தியாவின் முன்னணி பவுலர்களை சோதித்து வந்தார். குறிப்பாக பும்ரா ஓவரில் சிக்ஸர், அஸ்வின் ஓவரில் 3 பவுண்டரி என விளாசினார். ஆனால் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே முன்சே 24 ரன்களுக்கு நடையை கட்டினார்.

கடைசி வரை தடுமாற்றம்

கடைசி வரை தடுமாற்றம்

இதன் பின்னர் வந்த ஒரு வீரர்களை கூட இந்திய பவுலர்கள் தூக்கி அடிக்க விடவில்லை. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா களத்தில் அட்டகாசம் செய்தார். அவரின் ஓவரில் மேத்யூவ் கிராஸ் (2), ரிச்சி பெரிங்டன் (0), மைக்கேல் லீஸ்க் (21) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் ஸ்காட்லாந்து அணி 81 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

பிரகாசமான வாய்ப்பு

பிரகாசமான வாய்ப்பு

ஸ்காட்லாந்து அணி வீரர்களில் ஒருவர் கூட கடைசி நேரத்தில் அதிரடி காட்டாததால் 17.4 ஓவர்களில் அந்த அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. குறைவான இலக்கை இந்திய அணி வெகு சீக்கிரமாக விரட்டிவிட்டால் ரன் ரேட்டில் ஆஃப்கானிஸ்தான் அணியை விட முன்னேற்றம் கண்டு அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தும்.

Story first published: Friday, November 5, 2021, 21:18 [IST]
Other articles published on Nov 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+