Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றியை விட முக்கியமான விஷயம்.. விட்டுத்தர மறுக்கும் சிறிய அணி.. இந்தியாவுக்கு இன்று உள்ள கண்டம்!

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்திய அணிக்கு மிகப்பெரும் சவால் காத்துள்ளது.

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து அடி மேல் அடி வாங்கிய இந்திய அணி, தனது முழு ஆத்திரத்தையும் ஆஃப்கானிஸ்தான் மீது காட்டியது.

அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இன்னும் சிறிய அளவில் இருப்பதால், அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

 முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இந்திய அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவிடம் தோல்வியடைந்த ஆஃப்கானிஸ்தான் அடுத்ததாக நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் ஒருவேளை ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டால் இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பு உயிர் பெறும். எனினும் அதற்கு இந்திய அணி அடுத்துள்ள 2 லீக் ஆட்டத்திலும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

 இந்தியா - ஸ்காட்லாந்து

இந்தியா - ஸ்காட்லாந்து

அந்தவகையில் இன்று ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ஆனால் சிறிய அணியான ஸ்காட்லாந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு அவ்வளவு எளிதல்ல. இதுவரை ஸ்காட்லாந்துடன் இந்தியா விளையாடியதே இல்லை. கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு இருந்த போதும், மழைக்குறுக்கிட்டு ரத்தானது. இதனால் அந்த அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இந்திய அணிக்கு பெரியளவில் தெரியாது.

Recommended Video

பெரிய அணிகளுக்கே Surprise கொடுக்கும் Scotland.. India-க்கு காத்திருக்கும் சவால்
 நியூசிலாந்தே திணறல்

நியூசிலாந்தே திணறல்

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் யாரும் நினைத்து பார்க்காத ஆட்டத்தை ஸ்காட்லாந்து வெளிப்படுத்தி வருகிறது. தகுதிச்சுற்றில் தொடர் வெற்றிகளை பெற்று சூப்பர் 12க்கு வந்த அந்த அணி, நியூசிலாந்தையே திணறடித்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 172 ரன்கள் எடுக்க, அதனை 156 ரன்கள் வரை ஸ்காட்லாந்து துரத்திவிட்டது. இதனால் வெற்றி பெற்றுவிடுமோ என நியூசிலாந்து அணிக்கே வியர்வை கொட்டிவிட்டது.

இந்தியாவுக்கான சிக்கல்

இந்தியாவுக்கான சிக்கல்

இதனால் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணிக்கு இன்றை போட்டி சற்று கடினமாக இருக்கலாம். இதே போல போட்டி நடைபெறும் துபாய் மைதானத்திற்கும், இந்திய அணிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளதால் இன்று அங்கு அதிர்ஷ்டம் இருக்குமா என்பது தெரியவில்லை.

Story first published: Friday, November 5, 2021, 17:00 [IST]
Other articles published on Nov 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+