Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எங்கயா இருந்தீங்க இவ்ளோ நாளா”.. குறைத்து மதிப்பிட்ட ஆஃப்கான்.. பொழந்து கட்டிய இந்திய ஓப்பனர்கள்!

அமீரகம்: 2 தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் பவர் ப்ளேவை எதிர்கொண்டது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தந்துள்ளது.

டி20 உலகக்கோப்பையில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மீண்டும் இந்திய அணி டாஸ் தோற்றதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

டாஸ்

டாஸ்

கடந்த 2 போட்டிகளிலுமே டாஸில் தோல்வியடைந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி படு மோசமாக சொதப்பியது பவர் ப்ளே ஓவர்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பினர். இதற்கு காரணம், இந்திய பேட்ஸ்மேன்கள் கடும் அழுத்தம் மற்றும் பதற்றத்தினால் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்ததாக முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

நம்பிக்கை தொடக்கம்

நம்பிக்கை தொடக்கம்

ஆனால் இன்றைய போட்டியில் ஒட்டுமொத்த விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்தது இந்திய அணி. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் ஓவர் முதலே பவுண்டரிகளை சிதறடித்து வருகின்றனர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவருமே மிகுந்த நம்பிக்கையுடன் பேட்டை சுழற்றுகின்றனர். இது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

ஆஃப்கானிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் தான் ரோகித் சர்மா சொல்லி சொல்லி பவுண்டரி விரட்டினார். இதனால் 6 ஓவர்கள் ( பவர் ப்ளே) முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடி காட்டிய ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் தாண்டி விளையாடி வருகின்றனர்.

கடினமான இலக்கு?

கடினமான இலக்கு?

அபுதாபி களத்தில் 180+ என்ற ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தால் விரட்டுவது என்பது கடினமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. அந்தவகையில் தற்போது இந்திய அணியின் ரன் ரேட் 8.26 ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால் 180+ ரன்கள் நிச்சயம் வரும் எனக்கூறப்படுகிறது.

Story first published: Wednesday, November 3, 2021, 20:44 [IST]
Other articles published on Nov 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+