Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எல்லாம் போச்சே”.. வெற்றியிலும் பிசிசிஐ-க்கு வந்த சோகம்.. இந்திய பவுலர்களின் மோசமான ஃபார்ம்!

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பவுலிங் ரசிகர்களுக்கு பயத்தை கொடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்.17ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. வரும் 23ம் தேதி முதல் சூப்பர் 12 பிரிவு போட்டிகள் நடைபெறும்.

இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதியன்று முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

 பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

இதற்கு பயிற்சி மேற்கொள்ளும் வகையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் 2 பயிற்சி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனினும் பவுலிங்கில் இந்திய வீரர்கள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர்.

பேட்டிங்

பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. டாப் ஆர்டர் வீரர்கள் ஜேசன் ராய் 17, ஜோஸ் பட்லர் 18, டேவிட் மலான் 18 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. எனினும் பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ 49, லிவிங்ஸ்டன் 30, மொயின் அலி 43, ஆகியோர் அதிரடி காட்ட இந்தியாவுக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பவுலிங் அட்டாக்

பவுலிங் அட்டாக்

இந்திய அணி தரப்பில் முன்னணி பவுலர்களின் ஓவர்கள் சிதறடிக்கப்பட்டன. இந்த டி20 உலகக்கோப்பைக்கு முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோரையே வேகப்பந்துவீச்சில் நம்பியுள்ளது. ஆனால் பும்ரா மட்டும் தான் ஃபார்மில் உள்ளார். நேற்றைய போட்டியில் 4 ஓவர்களை வீசிய புவனேஷ்வர் குமார் மொத்தமாக 54 ரன்களை வாரி வழங்கினார். பதிலுக்கு ஒரு விக்கெட்டை கூட அவர் எடுத்துக் கொடுக்கவில்லை. இதே போல மற்றொரு சீனியர் வீரரான முகமது ஷமி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுத்தார். எனினும் அவரின் ஓவர்களில் 40 ரன்கள் பறந்தன.

மீண்டும் ஃபார்மில் பும்ரா

மீண்டும் ஃபார்மில் பும்ரா

ஐபிஎல் தொடரில் சற்று தடுமாற்றமடைந்து வந்த ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 4 ஓவர்களில் அவர் வெறும் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். எனினும் அவரின் ஓவரில் ஒரு விக்கெட் கூட வரவில்லை. சுழற்பந்துவீச்சில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் சஹார் 4 ஓவரில் 43 ரன்களை வாரி வழங்கினார். பதிலுக்கு ஒருவிக்கெட் மட்டுமே கிடைத்தது.

Recommended Video

From 2016 WC to 2021 WC: Things changed in Cricket | OneIndia Tamil
 அஸ்வினின் சுழல்

அஸ்வினின் சுழல்

ஆனால் அஸ்வின் மட்டும் தனது திறமையை நிரூபித்தார். கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் அவர், நேற்று தான் விளையாடிய முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் அவரின் மீது அனைவருக்கும் இருந்த சந்தேகங்கள் விலகியுள்ளது. இந்த அனைத்து தவறுகளையும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சரி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, October 19, 2021, 14:08 [IST]
Other articles published on Oct 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+