Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வரலாற்றில் முதல் முறை”.. ஜெர்ஸிகாக பிசிசிஐ செய்த ஏற்பாடு.. பிரமாண்டத்தில் வாயடைத்து போன அயல்நாடுகள்

அமீரகம்: இந்திய அணியை பெருமைப்படுத்தும் விதமாக உலக அணிகள் அனைத்தும் வியக்கும் அளவிற்கு பெரும் விஷயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

தகுதிச்சுற்றுப்போட்டிகள் ஓமனில் உள்ள மைதானத்திலும், சூப்பர் 12 பிரிவு போட்டிகள் அமீரகத்திலும் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.

 டி20 உலகக்கோப்பை போட்டி

டி20 உலகக்கோப்பை போட்டி

அந்தவகையில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 24 ல் எதிர்கொள்கிறது. டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதில் சிறு மாற்றங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜெர்ஸி நேற்று வெளியிடப்பட்டது.

ஜெர்ஸி மாற்றம்

ஜெர்ஸி மாற்றம்

உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு புது ஜெர்சி வழங்குவது வழக்கமாக இருக்கிறது. அந்தவகையில் 1992-ம் ஆண்டு இந்திய அணி அணிந்திருந்த ஜெர்சியை போன்று கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் ஜெர்ஸி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தாண்டு அது மாற்றி அமைக்கப்பட்டு புதிய டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ஜெர்ஸி

இந்திய அணி ஜெர்ஸி

நேற்று விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் இந்த ஜெர்சியை அறிமுகப்படுத்தினர். "இது ஒரு அணி மட்டுமல்ல, அவர்கள் இந்தியாவின் பெருமை. இது வெறும் ஜெர்சி அல்ல, ஒரு பில்லியன் ரசிகர்களின் ஆசீர்வாதம். இந்திய அணியை உற்சாகப்படுத்த தயாராகுங்கள் என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

புர்ஜ் கலிஃபா கட்டடம்

புர்ஜ் கலிஃபா கட்டடம்

இந்நிலையில் இந்திய அணியின் ஜெர்ஸியை பார்த்து அனைத்து அணிகளும் வியக்கும் அளவிற்கு ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது அமீரகத்தில் உள்ள உலக புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் மின் விளக்குகளால் இந்திய அணி ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது.

அணிகள் வியப்பு

அணிகள் வியப்பு

அதில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில், இந்திய அணி இதற்கு முன்னர் கோப்பை வென்ற சத்தங்கள், மற்றும் ரசிகர்களின் உற்சாகங்களுடன் தொடங்குகிறது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியின் ஜெர்ஸி புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் ஒளிபரப்பப்பட்டது அனைத்து அணிகளுக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

Story first published: Thursday, October 14, 2021, 19:23 [IST]
Other articles published on Oct 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+