For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டனாக இன்று கடைசி ஆட்டம்.. ரோகித் குறித்து சூசக பதில் சொன்ன கோலி.. ரசிகர்களுக்கு ஆச்சரியம்!

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் அட்டகாசமான வாய்ப்பை பெற்றுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி தொடங்கி தற்போது லீக் சுற்றுகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.

இந்த தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.

கோலி கடைசி போட்டி

கோலி கடைசி போட்டி

கோப்பையை வென்றுவிடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி இன்று நம்பியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்தியாவை தவிர்த்து கோலிக்கும் டி20 அணி கேப்டனாக இது கடைசி போட்டியாகும். இதற்கு பிறகு ரோகித் சர்மா புதிய கேப்டனாகவுள்ளார்.

டாஸ் வென்ற இந்திய அணி

டாஸ் வென்ற இந்திய அணி

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ராகுல் சஹார் சேர்க்கப்பட்டுள்ளார். 3 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. எனவே தாக்கத்தை ஏற்படுத்த ராகுல் சஹார் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்

இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்

இந்நிலையில் நமிபியா போட்டியில் இந்திய அணிக்கு அதிருஷ்டம் அடித்துள்ளது. அதாவது துபாய் மைதானத்தை பொறுத்தவரை டாஸ் தான் வெற்றியாளரை தீர்மானிக்கிறது. இங்கு பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பவுலிங் செய்து விக்கெட்களை எடுப்பதே சிறந்த முடிவாகும். 2வதாக பேட்டிங் செய்யும் அணி சுலபமாக ரன்களை குவித்துள்ளது.

கோலியின் பேச்சு

கோலியின் பேச்சு

எனவே இந்திய அணிக்கு இன்று விக்கெட் விருந்து என்றே கூறலாம். ஸ்காட்லாந்து போட்டியை போன்று கோலி மிகப்பெரும் வெற்றியுடன் பதவி விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய கோலி, இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டதில் மகிழ்ச்சி. அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நேரம் இது. ரோகித் அதற்காக காத்துக்கொண்டுள்ளார். இந்திய அணி சிறந்த நபரிடம் தான் செல்கிறது.அந்த நம்பிக்கை உள்ளது எனக்கோலி கூறியுள்ளார்.

Story first published: Monday, November 8, 2021, 19:33 [IST]
Other articles published on Nov 8, 2021
English summary
Team india won the toss against namibia, perfect ending for Captain kohli in T20 worldcup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+