Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானை எதிர்க்க தமிழக வீரர்தான் துருப்புச்சீட்டு.. ப்ளானை உடைத்த அதிகாரி.. ஆனால் ஒரு ஏமாற்றம்!

அமீரகம்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் இருக்கமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 23ம் தேதியன்று தொடங்கவுள்ளது.

இதில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்வதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

இந்த போட்டி வரும் அக்டோபர் 24ம் தேதியன்று மாலை துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் அமீரக களம் பாகிஸ்தான் அணிக்கு சாகதமானது. ஏனென்றால் பல்வேறு தொடர்களை பாகிஸ்தான் அணி அங்கு தான் விளையாடியுள்ளதால், அந்த அணியின் மற்றொரு ஹோ கிரவுண்டாக உள்ளது. இதே போல உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை பாகிஸ்தானால் இதுவரை ஒரு முறை கூட இந்திய அணியை வெல்லாததால், இந்த முறை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணியின் ப்ளேயிங் 11

இந்திய அணியின் ப்ளேயிங் 11

மிக முக்கியமானதாக பார்க்கப்படும் இந்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. பேட்டிங் வரிசை ஒருவழியாக இறுதிசெய்யப்பட்ட போதும், பந்துவீச்சில் இன்னும் தெள்வு வரவில்லை. அதாவது சுழற்பந்துவீச்சில் ஜடேஜா ஒரு இடத்தை பிடித்துவிட்ட நிலையில் மற்றொரு இடத்த்தை அஸ்வினுக்கு கொடுப்பதா அல்லது வருண் சக்கரவர்த்திக்கு கொடுப்பதா என்ற குழப்பம் தான் நீடித்து வருகிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச டி20க்களில் விளையாடாமல் இருக்கும் அஸ்வின், பயிற்சி போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். இதே போல ஐபிஎல் தொடரில் அனைவரின் கவனைத்தையும் ஈர்த்த வருண் சக்கரவர்த்தி பயிற்சியாளர்களின் மனதில் உள்ளார். ஆனால் வருணுக்கு முழங்காலில் ஏற்பட்ட காய பாதிப்பு இன்னும் முழுமையாக குணமடையாமல் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவரின் காயம் அதிகரித்துவிடும் என்பதால் அவரை கொண்டு வருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

 அதிகாரி தகவல்

அதிகாரி தகவல்

இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருக்கப்போவதாக அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். அவரை மருத்துவக்குழு தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மிக முக்கிய போட்டிகளில் வருண் நிச்சயம் கொண்டு வரப்படுவார். சற்று எளிதான போட்டிகளில் அவரின் முழங்காலுக்கு ஓய்வுக்கொடுக்கும் வகையில் வெளியே அமர வைக்கப்படுவார் எனக்கூறியுள்ளார்.

அஸ்வின் இல்லை

அஸ்வின் இல்லை

அதன்படி பார்த்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ரெக்கார்டை தொடர வேண்டும், அதே போல வெற்றியுடன் தொடரை தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்ற நோக்கத்தில் பிசிசிஐ உள்ளது. அமீரகத்தில் சுழற்பந்துவீச்சு நன்கு எடுபடும் என்பதால் வருணை கொண்டு வரதான் பிசிசிஐ முயற்சித்து வருகிறது. எனவே ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட மாட்டார் எனத்தெரிகிறது.

Story first published: Friday, October 22, 2021, 17:24 [IST]
Other articles published on Oct 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+