
கடைசி ஆட்டம்
அதற்கேற்றார் போலவே இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய நமீபியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 15.2 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

அபார வெற்றி
இந்திய அணியின் ஓப்பனிங் ஜோடி ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் மீண்டும் ஒருமுறை அசத்தினர். 37 பந்துகளை சந்தித்த ரோஹித் ஷர்மா 56 ரன்களும் 36 பந்துகளை சந்தித்த கே.எல்.ராகுல் 54 ரன்களும் விளாசினார். இதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 25 ரன்கள் சேர்க்க ஒரு விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது கோலிக்கு மன நிறைவான வெற்றியையும் தந்தது.

கோலி மனம் திறப்பு
போட்டிக்கு பிறகு பேசிய கோலி, ஏதோ ஒரு அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாக நினைக்கிறேன். என்னுடைய பணிச்சுமையை குறைக்க இதுதான் சரியான நேரம். 6-7 வருடங்களாக அதிகமான பணிச்சுமை இருந்தது. இதனால், அழுத்தங்களும் அதிகமாக இருந்தது. அரையிறுதிக்கு செல்ல முடியாது எனத் தெரியும். இருந்தாலும் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

பதற்றம் தான்
முதல் இரண்டு போட்டிகளில், பவர் பிளேவின் இரண்டு ஓவர்களில் அடித்து விளையாடியிருந்தால், முடிவுகள் வேறு மாதிரியாக கிடைத்திருக்கும். நாங்கள் அப்போது பதற்றமாக இருந்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். டாஸின் மீது பழிபோட்டு தப்பிக்க விரும்புவர்கள் நாங்கள் இல்லை.

ஆக்ரோஷம் தொடரும்
பயிற்சியாளர்களுக்கு நன்றி. கடந்த சில வருடங்களாக அவர்களின் சிறப்பாக வேலைகளை செய்து முடித்தனர். ஒரு குடும்பம் போல இந்த அணி இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டாலும், களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதை நிறுத்த மாட்டேன். அணிக்காக ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு வழங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள் என கோலி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications