For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்”.. வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல்ரவுண்டர் ஓய்வு.. மனம் கலங்க வைத்த பதிவு!

அமீரகம்: மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Recommended Video

சரியான நேரம் வந்துவிட்டது.. ஓய்வை அறிவித்த Bravo

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த தொடரில் இருந்து பல முன்னணி வீரர்கள் தங்களது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பிராவோவும் இணைந்துள்ளார்.

பிராவோ ஓய்வு

பிராவோ ஓய்வு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ, கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக அறிமுகமானார். அதே தொடரிலேயே டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாகி களக்கினார். கடந்த 18 ஆண்டுகளாக உலகின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த டுவைன் பிராவோ இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார். நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் தான் அவர் விளையாடவுள்ள கடைசி சர்வதேச போட்டியாகும்.

பிராவோ விளக்கம்

பிராவோ விளக்கம்

இதுகுறித்து பேசியுள்ள டுவைன் பிராவோ, சரியான நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் நல்ல பயணம் கிடைத்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பல்வேறு ஏற்ற தாழ்வுகளை பார்த்துள்ளேன். ஆனால் அவற்றை திரும்பி பார்க்கும் போது என் நாட்டு மக்களுக்காக நான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன் என நினைத்து பெருமை கொள்கிறேன்.

கடினம்

கடினம்

3 ஐசிசி கோப்பைகளை பார்த்துள்ளேன். அதில் 2 எனது கேப்டன் டேரன் ஷமி தலைமையில் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸில் தற்போது உள்ள வீரர்கள், சர்வதேச அளவில் நாட்டின் பெருமையை நிலைநிறுத்தக்கூடியவர்கள். அவர்களை நினைத்து பெருமைக் கொள்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி இந்தாண்டு அமையவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டோம். ஏனென்றால் போட்டி அவ்வளவு கடினமாக இருந்தது. சோர்வடைய மாட்டோம் எனக்கூறியுள்ளார்.

பிராவோ கிரிக்கெட் பயணம்

பிராவோ கிரிக்கெட் பயணம்

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 2,200 ரன்களும் 86 விக்கெட்களும் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 164 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2,968 ரன்களும், 199 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளை பொறுத்தவரை 90 போட்டிகளில் விளையாடி 1,245 ரன்களும், 78 விக்கெட்களும் எடுத்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் பிராவோ தொடர்ந்து உள்நாட்டு தொடர்களில் விளையாடுவார்.

Story first published: Friday, November 5, 2021, 11:13 [IST]
Other articles published on Nov 5, 2021
English summary
West Indies star all-rounder Dwayne Bravo on Thursday confirmed that he will retire from international cricket after the conclusion of the ICC Men's T20 World Cup campaign.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+