Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளேயிங் 11 மாற்றவே வேண்டாம்.. சிறிய விஷயம் செய்தால் இந்தியா செம கம்பேக் கொடுக்கலாம்.. எப்படி?

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் இனி வரும் போட்டிகளில் இந்திய அணி முக்கிய தவறுகளை சரிசெய்ய வேண்டியுள்ளது.

Recommended Video

T20 World Cup : 2021 Sachin Tendulkar points out India’s mistakes | OneIndia Tamil

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பெரியளவில் சொதப்பி வருகிறது. இதுவரை நடைபெற்ற 2 லீக் போட்டிகளிலும் மோசமான தோல்வி பெற்றுள்ளது.

இந்த முறை இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே இந்திய அணி தடுமாறி வருகிறது.

இந்திய அணிக்கு வந்த விணை

இந்திய அணிக்கு வந்த விணை

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் சரிந்தது. விராட் கோலி மட்டுமே அரைசதம் அடித்து காப்பாற்றினார். இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டரில் அதிரடி மாற்றமாக இஷான் கிஷான் ஓப்பனிங்கிற்கு களமிறங்கினார். ஆனால் இங்கு தான் இந்திய அணிக்கு விணையே தொடங்கியது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

பவர் ப்ளே ஓவரில் ரன்களை குவிக்க உதவுவார் என இஷான் கிஷான் ஓப்பனிங் களமிறக்கப்பட்டார். இப்படிபட்ட முக்கியமான போட்டியில் அவருடன் ஜோடியாக ரோகித் சர்மா களமிறங்கியிருக்க வேண்டும். ஆனால் மாறாக கே.எல்.ராகுல் களமிறக்கப்பட்டார். ரோகித் - இஷான் இருவருமே மும்பை அணிக்காக ஓப்பனிங்கில் சிறப்பாக ஆடியவர்கள். ரோகித் அந்த இடத்தில் இருந்திருந்தால் இஷானை களத்தில் இருந்து வழிநடத்தியிருக்கலாம். ஆனால் எந்தவித அட்வைஸும் இன்றி இஷான் வெகு சீக்கிரமே விக்கெட்டை இழந்தார்.

மாறிய பேட்டிங் வரிசை

மாறிய பேட்டிங் வரிசை

இதே போல ரோகித் சர்மாவுக்கு ஓப்பனிங் தான் சரியான இடம். ஆனால் முக்கியமான போட்டியில் 3வது வீரராக விளையாடினார். பவுண்டரி அடித்தே தீர வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் களமிறங்கி தூக்கி அடித்து அவுட்டானார். இதனால் விராட் கோலிக்கும் பேட்டிங் வரிசை மாறி டாப் ஆர்டர் மொத்தமும் சரிந்தது.

பவுலிங் தேர்வு

பவுலிங் தேர்வு

பந்துவீச்சை பொறுத்தவரையும் தற்போது உள்ள ப்ளேயிங் 11 சிறப்பாக உள்ளது. ஆனால் குறைவான ஸ்கோரை கட்டுப்படுத்த முடியாது என நம்பிக்கையின்றி விளையாடி வருகின்றனர். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி போன்ற இளம் வீரர்கள் சரியான மனநிலையுடன் விளையாடுவதில்லை. இதற்கு எம்.எஸ்.தோனி நிச்சயம் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர்.

பேட்டிங் வரிசை: ரோகித் சர்மா, இஷான் கிஷான், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர்.

பவுலர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி

Story first published: Tuesday, November 2, 2021, 20:11 [IST]
Other articles published on Nov 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+