Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை: ரன் ரேட் என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது?.. எளிய விளக்கம் இதோ!

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் நெட் ரன் ரேட் என்ற விதிமுறை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் ரன் ரேட் மட்டுமே கடைசி வாய்ப்பாக உள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த தொடரில் ஏற்கனவே குரூப் ஏ வில் ரன் ரேட் தந்து வேலையை காட்டிவிட்டது. அந்த குரூப்பில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகளுமே 5 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று ஒரே புள்ளிகளுடன் உள்ளன. ஆனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மட்டும் நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. தென்னாப்பிரிக்காவின் வாய்ப்பு பறிபோனது.

இந்தியாவின் நிலைமை

இந்தியாவின் நிலைமை

இதே நிலைமை தான் தற்போது இந்திய அணிக்கும் உள்ளது. 'பி' குரூப்பில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில் 2வது இடத்திற்கு நியூசிலாந்து, இந்தியா, ஆஃப்கானிஸ்தான் இடையே போட்டி நிலவி வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆஃப்கான் - நியூசிலாந்து போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு சென்றுவிடும்.

ரன் ரேட்

ரன் ரேட்

இந்நிலையில் ரன் ரேட் என்றால் எப்படி கணக்கிடப்படுகிறது என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நெட் ரன் ரேட் என்பது ( Total runs scored ÷ Total overs faced) - (Total runs conceded ÷ Total overs bowled) என்ற ஃபார்முலா தான். அதாவது முதலில் ஒரு அணி குவிக்கப்பட்ட ஸ்கோரை, எத்தனை ஓவர்களில் அதனை அடித்தனர் என்பதால் வகுக்கப்பட வேண்டும். பின்னர் எவ்வளவு ஸ்கோரை கட்டுப்படுத்தினர் என்பதனை எத்தனை ஓவர்களில் அதனை கட்டுப்படுத்தினர் என்பதுடன் வகுக்க வேண்டும். இந்த இரண்டிலும் வரும் விடைகளை கழித்தால் நெட் ரன் ரேட் என்பது கிடைத்துவிடும்.

உதராணம்

உதராணம்

உதாரணத்திற்கு இந்திய அணியை எடுத்துக்கொள்ளலாம். இந்திய அணி பேட்டிங்கை பொறுத்தவரை அடித்த ரன்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

151/7 (20) vs பாகிஸ்தான்

110/7 (20) vs நியூசிலாந்து

210/2 (20) vs ஆஃப்கானிஸ்தான்

89/2 (6.3) vs ஸ்காட்லாந்து

இதில் இந்திய அணி மொத்தமாக 66.5 ஓவர்களில் 560 ரன்களை குவித்துள்ளது. இதனை வகுக்கும் போதும் "8.42" என்பது விடையாகும்.

இதே போல பந்துவீச்சை பொறுத்தவரையில் பார்த்தால்,

152/0 (17.5) vs பாகிஸ்தான்

111/2 (14.3) vs நியூசிலாந்து

144/7 (20) vs ஆஃப்கானிஸ்தான்

85/10 (17.4) vs ஸ்காட்லாந்து

இதன்படி பார்த்தால் மொத்தம் 492 ரன்களை 72 ஓவர்களில் இந்திய அணி விட்டுக்கொடுத்துள்ளது. இதனை வகுத்தால் "6.802" என்பது விடையாகும்.

பேட்டிங்கில் வந்த 8.42 மற்றும் பவுலிங்கில் வந்த 6.802 ஆகியவற்றை வகுத்தால் ( 8.42 - 6.802) = + 1.619 என்ற விடை வரும். இதுவே இந்திய அணியின் ரன் ரேட் ஆகும். இதன் அடிப்படையில் தான் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லுமா என்பது தீர்மாணிக்கப்படவுள்ளது.

Story first published: Sunday, November 7, 2021, 23:47 [IST]
Other articles published on Nov 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+