Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசை.. பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்திற்கு தள்ளப்பட்டது இந்திய அணி!

துபாய்:உலக அளவிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.முதல் இடத்தை நியூசிலாந்து பிடித்துள்ளது.இந்தியா நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று டி 20 கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நியூசிலாந்து முதல் இடத்தையும்,இரண்டாவது இடத்தை இங்கிலாந்தும்,மூன்றாவது இடத்தை பாகிஸ்தானும், நான்காவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

T20I Rankings: India slip to 4th place, New Zealand on top after annual update

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் தரவரிசையையும் வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைக்கான புள்ளிகள் 2014-ம் ஆண்டு மே மாதத்திலும் இருந்தும், 2016-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்தும் கணக்கிடப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 25 சதவீத வெயிட்டேஜ், 2016 மே மாதத்தில் இருந்து 100 சதவீத வெயிட்டேஜ் முறையில் புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தென்ஆப்பிரிக்கா நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று 123 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா புள்ளிகளை இழக்காமலும், பெறாமலும் 118 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 5 புள்ளிகள் அதிகம் பெற்று 117 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.. நியூசிலாந்து 2 புள்ளிகள் பெற்று 115 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கும் சரிந்துள்ளது.

டி 20 போட்டிகளின் அணிகள் தரவரிசை

1. நியூசிலாந்து -125 புள்ளிகள்

2.இங்கிலாந்து - 121

3.பாகிஸ்தான் - 121

4.இந்தியா - 118

5.தென்னாப்பிரிக்கா- 111

6. ஆஸ்திரேலியா -110

7.மேற்கிந்திய தீவுகள் -109

8. இலங்கை - 95

9. ஆப்கானிஸ்தான் -90

10.பங்களாதேஷ் -78

11.ஸ்காட்லாந்து - 67

12.ஜிம்பாப்வே -65

13.ஐக்கிய அரபு நாடுகள் -52

14. நெதர்லாந்து - 49

15. ஹாங்காங் -46

16. பப்புவா நியூ கினியா -39

17. ஓமன் -38

18.அயர்லாந்து -36

Story first published: Tuesday, May 2, 2017, 17:56 [IST]
Other articles published on May 2, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+